கிள்ளை:கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டட பணியை, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானமூர்த்தி, பார்வையிட்டார்.கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, 2 கோடியே 29 லட்சம் மதிப்பில், புதியதாக 11 வகுப்பறை, அறிவியல் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை, வேலுார் வட்டம் பொதுப்பணித்துறை கட்டட கண்காணிப்பு பொறியாளர் ஞானமூர்த்தி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் கவிதா, பாலகுரு உடனிருந்தனர்.