பொது செய்தி

இந்தியா

சிதம்பரத்துக்கு கைமாறிய ரூ.35 கோடி 'அப்ரூவர்' இந்திராணி வாக்குமூலம்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 சிதம்பரம், கைமாறிய ரூ.35 கோடி

புதுடில்லி, :'ஐ.என்.எஸ்., மீடியா' ஊழல் வழக்கில், தங்களுக்கு உதவுவதற்காக, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவருடைய மகன் கார்த்திக்கு, 35 கோடி ரூபாய் அளித்ததாக, இந்த வழக்கில், 'அப்ரூவராக' மாறியுள்ள இந்திராணி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, 2007ல் அனுமதி வழங்கப்பட்டது. தன் மகன் கார்த்தியின் தலையீட்டால், அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம், இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதில் பல மோசடிகள் நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், தற்போது, அமலாக்கத் துறை காவலில் உள்ளார். இந்த நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது.

அதில், சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி, ஐ.என்.எக்ஸ்., மீடியா உரிமையாளர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியான, இந்திராணி அப்ரூவராகி உள்ளார்.


தன்னுடைய மகள் கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி அளித்துள்ள வாக்குமூலத்தை, குற்றப்பத்திரிகையில், சி.பி.ஐ., குறிப்பிட்டு உள்ளது. 'எங்களுக்கு உதவியதற்காக, சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு, வெளிநாடுகள் மூலமாக, 35 கோடி ரூபாய் பணத்தை வழங்கினோம்' என, தன் வாக்குமூலத்தில் இந்திராணி கூறியுள்ளார்.அவர் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து தகவல் கேட்டு, சி.பி.ஐ., முறைப்படி கடிதம் எழுதியுள்ளது; பதிலுக்காக காத்திருப்பதாக, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
21-அக்-201913:39:17 IST Report Abuse
oce இந்திராணி யாரென்றே தெரியாது என்று கூறுபவர் முப்பத்தைந்து கோடியை எந்த ஆதாரத்தில் வாங்கினார்.
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
20-அக்-201907:34:00 IST Report Abuse
HSR இந்த லட்சணத்தில் இந்த பகல் கொள்ளையனை வெற்றி பெற வைத்த டம்ளர்கள நெனச்சா பாவமா இருக்கு..இந்தியாவிலேயே மிகவும் பாமர ஊழல்லுக்கு துணை போகிற காசு கொடுத்தால் ஹபீஸ் சையிது இம்ரான் கானை கூட வெற்றி பெற வைக்கும் தமிழனுக்கென்று ஒரு பிச்சைக்கார குணமுண்டு அவனுக்கே உரித்தான கூவத்தின் மணமுண்டு. .... மறுபடியும் விக்ரவாண்டியில் நாங்குநெரியில் இந்த கொள்ளை கூட்டணிக்கு ஓட்டளித்து செயிக்க வைங்கடா..உங்க சந்ததிகள் நன்றாக இருக்கும்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
20-அக்-201909:39:34 IST Report Abuse
Pannadai Pandianthey are all …….not THAMIZHANS …….....
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
21-அக்-201909:40:34 IST Report Abuse
THENNAVANஅப்புறம் உண்மையை சொல்லுங்க...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-அக்-201907:04:50 IST Report Abuse
blocked user இன்னும் ஒரு life line இருக்கிறது. வெளிநாட்டு வங்கிப்பரிமாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குப்பின் அழிக்கப்படும். இப்பொழுது அந்தக்கலாக்கட்டம் தாண்டாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு வேளை அவை அழிக்கப்பட்டு இருந்தால் அது ஒரு தெம்பைக்கொடுக்கும். ஒருவேளை நேரடியாக மகனை வைத்து தப்பிலித்தனம் செய்தது நிரூபிக்கப்பட்டால் சிறை செல்லுவது 100% உறுதியாகி விடும்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
20-அக்-201909:40:51 IST Report Abuse
Pannadai Pandianintha siva gangai thirudanai 20 varudam ulla thallunga…......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X