சிதம்பரத்துக்கு கைமாறிய ரூ.35 கோடி அப்ரூவர் இந்திராணி வாக்குமூலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிதம்பரத்துக்கு கைமாறிய ரூ.35 கோடி 'அப்ரூவர்' இந்திராணி வாக்குமூலம்

Updated : அக் 19, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி, :'ஐ.என்.எஸ்., மீடியா' ஊழல் வழக்கில், தங்களுக்கு உதவுவதற்காக, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவருடைய மகன் கார்த்திக்கு, 35 கோடி ரூபாய் அளித்ததாக, இந்த வழக்கில், 'அப்ரூவராக' மாறியுள்ள இந்திராணி கூறியுள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, 2007ல் அனுமதி வழங்கப்பட்டது. தன் மகன்
 சிதம்பரம், கைமாறிய ரூ.35 கோடி

புதுடில்லி, :'ஐ.என்.எஸ்., மீடியா' ஊழல் வழக்கில், தங்களுக்கு உதவுவதற்காக, காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவருடைய மகன் கார்த்திக்கு, 35 கோடி ரூபாய் அளித்ததாக, இந்த வழக்கில், 'அப்ரூவராக' மாறியுள்ள இந்திராணி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, 2007ல் அனுமதி வழங்கப்பட்டது. தன் மகன் கார்த்தியின் தலையீட்டால், அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான சிதம்பரம், இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதில் பல மோசடிகள் நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், தற்போது, அமலாக்கத் துறை காவலில் உள்ளார். இந்த நிலையில், இந்த மோசடி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது.

அதில், சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி, ஐ.என்.எக்ஸ்., மீடியா உரிமையாளர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியான, இந்திராணி அப்ரூவராகி உள்ளார்.


latest tamil news




தன்னுடைய மகள் கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி அளித்துள்ள வாக்குமூலத்தை, குற்றப்பத்திரிகையில், சி.பி.ஐ., குறிப்பிட்டு உள்ளது. 'எங்களுக்கு உதவியதற்காக, சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு, வெளிநாடுகள் மூலமாக, 35 கோடி ரூபாய் பணத்தை வழங்கினோம்' என, தன் வாக்குமூலத்தில் இந்திராணி கூறியுள்ளார்.அவர் குறிப்பிட்டுள்ள நாடுகளில் இருந்து தகவல் கேட்டு, சி.பி.ஐ., முறைப்படி கடிதம் எழுதியுள்ளது; பதிலுக்காக காத்திருப்பதாக, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X