புதுச்சேரி:மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகளை பின்பற்றாத மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவ கழிவுகள் மேலாண்மை கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கலெக்டர் அருண் தலைமை தாங்கினார்.உள்ளாட்சி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பொதுப்பணி ஆகிய துறைகளின் அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கம், திடக்கழிவு மேலாண்மை நிர்வாக பிரநிதிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சில முடிவுகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில் உருவாகும் மருத்துவக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் எப்படி அகற்றப்படுகிறது என்பதை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு குழு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரிகளிடம் இருந்து பெறப்படும் மருத்துவக் கழிவுகளை கவனமாக கையாள வேண்டும். அவை, பொது கழிவுகளோடு கலந்துவிடாமல் இருக்க வேண்டும் என திடக்கழிவு மேலாண்மை நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளை பின்பற்றாத மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிமம் இன்றி செயல்படும் மருத்துவ நிறுவனங்களை உடனடியாக மூடி சீல் வைக்கவும், கலெக்டர் அருண் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE