பொது செய்தி

இந்தியா

தமிழகம் முழுதும் கண்காணிப்பு வளையத்தில் கோவில், மசூதி

Updated : அக் 21, 2019 | Added : அக் 19, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகம், கண்காணிப்பு,  கோவில், மசூதி, அயோத்தி, சுப்ரீம் கோர்ட்,  உள்துறை அமைச்சகம், தமிழகம், தினமலர்,  Tamil nadu, TN, Mosque, temples, dinamalar, Ayodhya, scupreme court,  உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில், எப்போது வேண்டுமானாலும், தீர்ப்பு வெளியாகலாம் என்பதால்,
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம், கடிதம் எழுதி உள்ளது. அதன்
அடிப்படையில், தமிழகம் முழுதும், கோவில்கள், மசூதிகள் போன்றவை,
கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகள், சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்று, 2010ல், அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, 14 பேர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டது.


யோசனைஇந்த மனுக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோேகாய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு விசாரித்தது. அப்போது, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்தது.அதற்காக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், சமரச குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட், 6 முதல்,
உச்ச நீதிமன்றமே வழக்கை விசாரித்தது. தினசரி அடிப்படையில், அதே அமர்வில், வழக்கு விசாரணை, 40 நாட்கள் நடந்தது.அப்போது, சமரச குழு, தன் இறுதி அறிக்கையை தாக்கல்
செய்தது. அனைத்து தரப்பினரின் விவாதம், இம்மாதம், 16ம் தேதி நிறைவடைந்தது.


முன்னெச்சரிக்கைஅதன்பின், அனைத்து தரப்பினரும், தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை, மூன்று நாட்களுக்குள், தாக்கல் செய்யும்படி கூறிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அடுத்த மாதம், 17ம் தேதி, ஓய்வுபெற உள்ளார். அதற்குள் தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில், நீதிபதிகள் உள்ளனர்.

எனவே, அடுத்த மாதம், 13ல் இருந்து, 15க்குள், தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியானால், 134 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, இந்த வழக்கு முடிவிற்கு வரும்.
அயோத்தி தீர்ப்பால், நாட்டில் எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காக, மத்திய
உள்துறை அமைச்சகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக, தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களுக்கும், மத்தியஉள்துறை
அமைச்சகம், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி, கடிதம் எழுதி உள்ளது. மதுரை, திருச்செந்துார், பழநி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், சென்னைஉட்பட, முக்கிய இடங்களில் உள்ள கோவில்கள் மற்றும் மசூதிகளில், பாதுகாப்பைஅதிகப்படுத்தும்படியும் தெரிவித்துள்ளது.


உத்தரவுஏற்கனவே, அயோத்தியில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி தொடர்பாக, 'டிவி'க்களில் விவாதம் நடத்தவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. துணைராணுவ படையும், அயோத்திக்கு அனுப்பப்பட உள்ளது.மத்திய உள்துறை அமைச்சக உத்தரவை ஏற்று, தமிழக
அரசும், மாநிலம் முழுவதும், அனைத்து கோவில்களையும், மசூதிகளையும், கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-201913:55:39 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் நாட்டின் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை. போரிடுவதெற்கென்று தனியாக இடம் ஒதுக்கி அதில் போரிட்டவர்கள் நமது தமிழ் மன்னர்கள். ராம ஜென்ம பூமியின் தீர்ப்பு எதுவாகினும் எனக்குக் கவலை இல்லை. தமிழ் நாட்டின் பிரச்னை எவ்வாறு நாட்டின் பிரச்னை இல்லையோ, அது போல இது உத்தர பிரதேசத்தின் பிரச்னை.
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
20-அக்-201909:53:22 IST Report Abuse
Loganathan Kuttuva டிவி செய்தி சானல்களில் ஒளிபரப்பு நேரத்தை வெகுவாக குறைக்க வேண்டும். தேவையற்ற விவாதங்களை நீக்க வேண்டும்.
Rate this:
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
20-அக்-201908:43:45 IST Report Abuse
s.maria alphonse pandian புஸ் என்று போகப்போகும் தீர்ப்புக்கு இவ்வளவு பில்டப் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X