அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முரசொலி' நிலம் விவகாரம்: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

Added : அக் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
'முரசொலி' நிலம் விவகாரம்: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை, :'முரசொலி' நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 'சென்னையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது' என குற்றம் சாட்டினார்.அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் 'அது பட்டா நிலம்' எனக்கூறி பட்டா நகலை 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.மேலும் 'அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்.அவர் சொல்வதை நிரூபிக்க தவறினால் அவரும் அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா' என ஸ்டாலின் சவால் விட்டிருந்தார்.இது தொடர்பாக ராமதாஸ் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ல் வாங்கப்பட்ட பட்டாவை ஸ்டாலின் ஆதாரமாக காட்டியிருக்கிறார்.இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப்பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும். அவை எங்கே; நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?முரசொலி அலுவலகம் எப்போது கட்டப்பட்டது; எப்போது இடம் வாங்கப்பட்டது; அவற்றை விடுத்து 1985ம் ஆண்டு பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார்.இடையில் உள்ள 20 ஆண்டுகள் மறைக்கப்படுகிறதே; அதன் மர்மம் என்ன?முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி இருந்தது.இது ஸ்டாலினுக்கு தெரியுமா; 'அது தனியாருக்கு சொந்தமான மனை' என்கிறார் ஸ்டாலின். அப்படியென்றால். அங்கு அரசு விடுதி எப்படி வந்தது? நிலம் அபகரிப்பு தி.மு.க.வினருக்கு முழு நேர தொழில் தானே. அனாதை இல்லம் என்ற பெயரில் அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004ல் அ.தி.மு.க. ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிக்கையை 2007ல் தி.மு.க. ஆட்சியில் தங்களுக்கு தாங்களே ரத்து செய்த நியாயவான் தான் தி.மு.க. தலைமை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-அக்-201907:44:24 IST Report Abuse
Sriram V All these are common in Dhirudargal munnetra kalagam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X