சென்னை, 'முதல்வர்பழனிசாமிஅடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்த வேண்டும்' என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் முதல்வர் மக்களின் கவனத்தை திசை திருப்புகிற வகையில் அவதுாறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார்.ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் ஊழல் புகார் கொடுத்து வழக்கு தொடுத்தது தான் காரணம் என்று அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்; அதை அவர் நிறுத்த வேண்டும். ஜெ. ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் குறித்து அன்றைய கவர்னர் சென்னா ரெட்டியிடம் விசாரணை கமிஷன் அமைக்க மனு அளிக்கப்பட்டது. இதில் சுப்ரமணியசாமி முன்னாள் அமைச்சர்கள் ராஜாராம்,திருநாவுக்கரசர்,சுவாமிநாதன்,முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கையொப்பமிட்டனர். இதில் தி.மு.க. காங்கிரஸ் கட்சிக்கு எந்த பங்கும் இல்லை. ஜெ. மறைவுக்கு ஸ்டாலினும் சிதம்பரமும் தான் காரணம் என கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது.இத்தகைய பொய் பிரசாரத்தின் வழியே வாக்காளர்களை ஏமாற்ற முடியாது.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.