பா.ஜ.,வுடன் ரகசிய ஒப்பந்தம் அம்பலம் போட்டுடைத்தார் ம.ஜ.த., எம்.எல்.ஏ.,

Added : அக் 20, 2019
Advertisement

மாண்டியா, ''கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்ட போது பா.ஜ.வுக்கு ஆதரவளிக்க முன்னாள் முதல்வர் குமாரசாமி உட்பட ம.ஜ.த. - எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முடிவு செய்திருந்தோம். ஆனாலும் எதற்காக 'ஆபரேஷன் தாமரை' செய்தனர் என தெரியவில்லை'' என ம.ஜ.த. - எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா கூறியது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் ம.ஜ.த. -- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது குமாரசாமி முதல்வராக இருந்தார். ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக இரு கட்சிகளின் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.அப்போது குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதற்கு பா.ஜ.வின் ஆப்ரேஷன் தாமரை தான் காரணம் என்று காங்கிரசாரும் காங். முன்னாள் முதல்வர் சித்தராமையா தான் காரணம் என ம.ஜ.த.வினரும் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில் மாண்டியா மாவட்டம் நாகமங்களா சட்டசபை தொகுதி ம.ஜ.த. - எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடா நேற்று அளித்த பேட்டி:சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ. அதிக தொகுதிகளில் வெற்றி பெறாது. இதற்காக மீண்டும் ஒருமுறை 'ஆபரேஷன் தாமரை' நடத்துவர். ம.ஜ.த. - எம்.எல்.ஏ.க்களை மரியாதையாக நடத்தினால் பா.ஜ. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க தீர்மானம் செய்தோம்.இது பற்றி குமாரசாமி உட்பட கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்தோம். 'நமக்கு மரியாதை கொடுத்தால் ஆதரவளிப்போம்' என குமாரசாமி கூறியது உண்மை. ஆனாலும் எதற்காக பா.ஜ.வினர் 'ஆபரேஷன் தாமரை' செய்தனர் என தெரியவில்லை.பா.ஜ. அரசின் செயல்பாட்டை பார்க்கும் போது ம.ஜ.த. ஆதரவளிப்பது சந்தேகம். ஏனென்றால் 2017 - 18ல் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிதி தடை செய்யப்பட்டுள்ளது.பா.ஜ.வின் அரசியல் செயல்பாடு புரியவில்லை. இது பற்றி பார்க்கும் போது ஆட்சி நடத்த மட்டும் மக்கள் வேண்டும். ஆனால் மக்களின் குறை தீர்க்க மாட்டோம் என்பதை காட்டுகிறது. எத்தனை நாட்கள் அரசு நடக்கும் என்று பார்க்கலாம். அனைத்தை சவால்களையும் எதிர்கொள்வோம். 2018லிருந்தும் எனக்கும் பா.ஜ.வினர் ஆசை வார்த்தை கூறி வருகின்றனர். மக்கள் வழங்கிய அதிகாரத்தை விற்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X