அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்:ஸ்டாலின்

Added : அக் 20, 2019
Advertisement
 அ.தி.மு.க., அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்:ஸ்டாலின்

விக்கிரவாண்டி:'தமிழகத்தில் நடைபெறும் ஊழல் அ.தி.மு.க., அரசுக்கு கடிவாளம் அமைக்கும் வகையில் இந்த இடைத்தேர்தலில் பாடம் புகட்டுங்கள்' என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அசோகபுரி, ஈச்சங்குப்பம் பகுதிகளில் நடந்த திண்ணை பிரசாரத்தில் பேசியதாவது:தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல் ஆட்சியாக நடைபெறுகிறது. அ.தி.மு.க.,வில் 11 எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கின் தீர்ப்பு, தேர்தல் முடிந்தவுடன் வந்துவிடும்.இந்த ஆட்சி இன்னும் 3 மாத காலத்திற்குள் சென்றுவிடும் என்பதால், எவ்வளவு ஊழல் செய்ய முடியுமோ அதை செய்து பணம் கொள்ளையடிக்கின்றனர். இந்த அராஜக ஆட்சிக்கு கடிவாளம் அமைக்கின்ற வகையில் இந்த தேர்தலில் பாடம் புகட்டுங்கள்.விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இந்த அணி வெற்றி உறுதி. இத்துடன் ராதாபுரம் தொகுதியிலும் தி.மு.க., வெற்றி என நீதிமன்றம் தீர்ப்பு வந்து விடும். எனவே மூன்று தொகுதிகளில் தி.மு.க., வெற்றி உறுதி. எனவே இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் புகழேந்திக்கு உதய சூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தேர்தல் பணிக்குழுத் தலைவர் பொன்முடி, செயலர் ஜெகத்ரட்சகன் எம்.பி., தேர்தல் பொறுப்பு குழு முன்னாள் அமைச்சர் நேரு, மஸ்தான் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலர்கள் ரவி, ரவிதுரை, ராஜா, மும்மூர்த்தி, முருகன், நகர செயலர் நைனா முகமது, மாவட்ட பிரதிநிதிகள் அப்துல் சலாம், திலகர், வெங்கடேசன், அருணாசலம்.மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு ஜீவானந்தம், முரளி, பாலாஜி, முன்னாள் இளைஞரணி எத்திராஜன், ஊராட்சி செயலர்கள் அரிகிருஷ்ணன், ஜெயபால், இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன்.துணை அமைப்பாளர்கள் சிலம்பரசன், வெற்றிவேல், சுதாகர், சபரிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, பாலாஜி, செல்வகுமார், ஜெகதீசன், இஸ்மாயில், திவாகர், ரகு, இலக்கிய அணி கில்பர்ட், நகர இளைஞரணி கார்த்திக், பிரசாத், பாண்டியன், அசோக், சிவா, மாணவரணி யுவராஜ், சைபுல்லா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X