பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த கட்டம்: ரஜினி திட்டம் என்ன?

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: ஐந்து நாள் ஆன்மிகபயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ள ரஜினி தன் அடுத்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாது அரசியல் கட்சி துவக்குவது தொடர்பான வேலைகளிலும் தீவிரமாக இறங்க உள்ளார்.தர்பார் படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினி அக்டோபர் 13ல் ஆன்மிக பயணமாக ரிஷிகேஷ் கேதார்நாத் பாபாஜி ஆசிரமம் மற்றும் பத்ரிநாத் பகுதிகளுக்கு சென்றார். ரஜினியுடன் மகள் ஐஸ்வர்யாவும்
ரஜினி, திட்டம், Rajini, Next plan, dharbar, Movie, yatra tour, acting, travel experience, chennai airport, dinamalar, Rajini dinamalar, ரஜினி தினமலர், தினமலர்,

சென்னை: ஐந்து நாள் ஆன்மிகபயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ள ரஜினி தன் அடுத்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாது அரசியல் கட்சி துவக்குவது தொடர்பான வேலைகளிலும்
தீவிரமாக இறங்க உள்ளார்.

தர்பார் படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினி அக்டோபர் 13ல் ஆன்மிக பயணமாக ரிஷிகேஷ் கேதார்நாத் பாபாஜி ஆசிரமம் மற்றும் பத்ரிநாத் பகுதிகளுக்கு சென்றார். ரஜினியுடன் மகள்
ஐஸ்வர்யாவும் ரஜினியின் நண்பர் களும் சென்றிருந்தனர்.ஐந்து நாட்கள் ஆன்மிக பயணத்தை முடித்து நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திரும்பினார் ரஜினி.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'தன் பயணம் சிறப்பாக இருந்தது' என மகிழ்ச்சி தெரிவித்தார்.

தர்பார் படத்தை முடித்த கையோடு கட்சியை ஆரம்பித்து தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை ரஜினி தீவிரப்படுத்துவார் என நம்பியிருந்த அவரது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகஅறிவித்து இருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.ஆனாலும் 'ரஜினி திட்டமிட்டபடி சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சியை
ஆரம்பித்து தேர்தலை சந்திப்பார்' என அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் நம்புகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் 'சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் அல்லது ஆறு மாதத்தில் கட்சி ஆரம்பித்து சூட்டோடு சூடாக தேர்தலை சந்திப்பதே ரஜினியின் திட்டம்.
'ரஜினியின் 168வது படத்தை சிவா இயக்கு கிறார். இதன் படப்பிடிப்பின் முடிவில் அல்லது படம் வெளியாகும் போது ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார்' என்றனர்.


நிலவேம்பு கஷாயம்!மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஜினி மக்கள் மன்றத்தினர் தற்போது வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு உண்டான முன்னெச்சரிக்கை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். வடசென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்த கட்டப் பணியாக
வடசென்னையில் அனைத்து பகுதியிலும் இன்று நிலவேம்பு கஷாயத்தை இலவசமாக
வழங்குகின்றனர். இதற்கு முன் குடிநீர் தட்டுப்பாட்டின் போது நகர் முழுவதும் இலவசமாக
தண்ணீர் வினியோகித்தனர்.


ரசிகரை கண்டித்த ரஜினிஇமயமலை பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ரஜினியின் காரை விமான நிலையத்தில் இருந்து பைக்கில் அவரது ரசிகர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றார். கார் போயஸ் கார்டன்
வந்தடைந்ததும் பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகரை அழைத்து வரும்படி ரஜினி கூறினார்.அவர் வந்ததும் அவரது விருப்பப்படி அவருடன் புகைப்படம் எடுத்தார். பின் 'இதுபோல் உயிரை பணயம் வைத்து பைக் ஓட்டக் கூடாது. இப்படி காரை பின்தொடரவும் கூடாது' என ரசிகரை கண்டித்தார்.

சமீபத்தில் நடிகர் அஜித்தை இதேபோல் ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து பைக்கில் பின்தொடர்ந்தார். அவரை பாதியிலேயே நிறுத்திய அஜித் அவருடன் புகைப்படம் எடுத்ததுடன் கண்டித்து அனுப்பினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittal Anand - Chennai,இந்தியா
26-அக்-201903:05:23 IST Report Abuse
Vittal Anand இவருக்கெல்லாம் என்ன கொள்கை கட்சி தொடங்க? வருமான வரி கறுப்புப்பணம் இருந்தால் மட்டும் ஆளும் கட்சியில் சேர்ந்து பாது காப்பு பெறவேண்டும்..
Rate this:
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
23-அக்-201909:51:06 IST Report Abuse
Thalaivar Rasigan ரஜினி ரசிகர்களை பற்றி கண்டவன் எல்லாம் கவலைப்படுகிறான் - நாங்க யாரும் கவலை-அதிர்ச்சி அடையவில்லை. ஊடக பசிக்கு இதையே எவ்வளவு நாள் எழுதி தள்ளுவீங்க. ரஜினி தேர்தலுக்கு 6 - 8 மாதங்களுக்கு முன்தான் கட்சி தொடங்குவார் என எங்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-அக்-201903:52:10 IST Report Abuse
J.V. Iyer அவருடைய பெண்களும், மாப்பிள்ளைகளும் அரசியலில், இவர் கட்சியில் பெரும் பங்கு வகிப்பார்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இந்த புகைப்படம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X