சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரப்பன் கைதாவாரா? ஹிந்து அமைப்புகள் போலீசில் புகார்

Updated : அக் 21, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (85)
Share
Advertisement
  காரப்பன் கைதாவாரா?

கோவை: ஹிந்து கடவுள் கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை இழிவாக பேசிய, சிறுமுகை, 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர் காரப்பன் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையைச் சேர்ந்தவர், காரப்பன். 'காரப்பன் சில்க்ஸ்' உரிமையாளர்.
இவர், செப்., 29ல், கோவையில் நடந்த, திராவிடர் இயக்க தமிழர் பேரவை கருத்தரங்கில், ஹிந்து கடவுள் கிருஷ்ணரை, 'பொம்பள பொறுக்கி' என்றும், 'அத்திவரதரை பரதேசி' என்றும் இழிவாக பேசினார்.
இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி, ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news




காரப்பனுக்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவர், தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.'சிறுமுகையிலுள்ள, காரப்பன் சில்க்ஸ் கடையில் ஆடை வாங்காமல் புறக்கணிப்போம்' என, சுற்றுவட்டார பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.காரப்பன் மீது நடவடிக்கை கோரி, வீடியோ ஆதாரத்துடன், ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் சார்பில், சிறுமுகை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை, எஸ்.பி., சுஜித்குமாரிடம் கேட்டபோது, ''காரப்பன் மீது, சிறுமுகை போலீசில் புகார் பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட நிகழ்வு, கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் நடந்துள்ளது. மாநகர போலீசார் விசாரித்து, நடவடிக்கை எடுப்பார்கள்,'' என்றார்.காரப்பன் இழிவாக பேசிய கருத்தரங்கு, கோவை மாநகருக்குள், பீளமேட்டில் நடந்துள்ளது. புகார் வந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.இதன்படி, காரப்பன் மீது, மாநகர போலீசிலும் புகார் அளிக்க, ஹிந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-அக்-201920:31:39 IST Report Abuse
Girija கரப்பான்களுக்கு போய் எதிர் பதில் பேசிகிட்டு ? அதுக்கு ஆயுளே கம்மி தானாக போய்விடும்.
Rate this:
Cancel
20-அக்-201919:17:05 IST Report Abuse
வினாயகம் இந்துக்களை புறக்கணிப்பதில் இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே அணியில் நிற்கின்றன. எனவே, இந்துக்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டளிக்கக் கூடாது.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-அக்-201918:45:50 IST Report Abuse
Sampath Kumar நல்லா கைது பண்ணுக ?? அதுக்கு முன்னாடி அவரு கேட்ட கேளிவிக்கு பதில் சொல்ல முயற்சி செயுங்க
Rate this:
20-அக்-201919:36:16 IST Report Abuse
சிவம். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தெய்வத்தை பற்றி என்ன தெரிய வேண்டும். திராவிடர் இயக்க பேரவையில் கூட தெய்வ நம்பிக்கை உள்ளவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் எடுத்த வீடியோ, வைரலாகி, காரப்பனின் தலையெழுத்தையே மாற்ற போகிறது. தி.க வீரமணியே உங்கள் கூட்டத்தில் பலர் ஆத்திகர்கள் இருக்கலாம். ஜாக்கிரதை. ஒரு நாள் அவர்களாலேயே நீங்கள் அழிவது நிச்சயம். எல்லாம் அவன் செயல்....
Rate this:
blocked user - blocked,மயோட்
20-அக்-201921:17:01 IST Report Abuse
blocked userகடவுள் இல்லை என்றால் ஏசுவும் இல்லை, அல்லாவும் இல்லை என்று விவரமாக சொல்ல வேண்டியதுதானே. இந்துக்கடவுளை மட்டும் குறி வைப்பானேன்? இந்துக்கள் உதைக்க மாட்டார்கள் என்ற தைரியமா?...
Rate this:
பேப்பர்காரன் - Trichy,இந்தியா
21-அக்-201900:38:20 IST Report Abuse
பேப்பர்காரன்என்ன பதில் சொல்லணும் உனக்கு ? இயேசு ஒரு அப்பத்தை பிச்சு எல்லார் பசியையும் எப்படி ஆற்றினார்? செத்து போனவர் எப்படி உயிருடன் வந்தார் ? தனது மதத்தை பின்பற்றாதவரை கொல்ல சொல்லி நபிகள் எப்போது சொன்னார் ? இது போன்ற கேள்விக்கு நீ பதில் சொல் அப்புறம் கூவு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X