பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயியாக மாறிய பி.டெக்., பட்டதாரி பெண்: நஞ்சில்லாம விவசாயம் மேற்கொள்ள உறுதி

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சை அருகே 2.5 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் முயற்சியில் பி.டெக். படித்த இளம்பெண் இறங்கியுள்ளார்.தஞ்சாவூர் கல்லணை அடுத்த பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சபாபதி - தேன்மொழி தம்பதியின் ஒரே மகள் குறிஞ்சிமலர் 22.இவர் சென்னையில் 2018ல் பி.டெக். பயோ டெக்னாலஜி முடித்து ஓராண்டாக பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை.சொந்த ஊருக்கு திரும்பிய
தஞ்சாவூர், விவசாயி, பி.டெக்., பட்டதாரி பெண், ஆலோசனை, Tanjore, Former, B.tech student,  agriculture

தஞ்சாவூர்: தஞ்சை அருகே 2.5 ஏக்கர் தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் முயற்சியில் பி.டெக். படித்த இளம்பெண் இறங்கியுள்ளார்.

தஞ்சாவூர் கல்லணை அடுத்த பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சபாபதி - தேன்மொழி
தம்பதியின் ஒரே மகள் குறிஞ்சிமலர் 22.இவர் சென்னையில் 2018ல் பி.டெக். பயோ டெக்னாலஜி முடித்து ஓராண்டாக பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை.சொந்த ஊருக்கு திரும்பிய குறிஞ்சி மலர் உறவினர் ஒருவரின் தரிசு நிலத்தை விவசாயம் செய்ய வேண்டும் எனக் கேட்டார்.

குறிஞ்சிமலரின் ஆர்வத்தை பார்த்த உறவினரும் 2.5 ஏக்கர் நிலத்தை வழங்கினார். அந்த
நிலத்தில் 1500 தேக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளார்.அடுத்த ஆண்டு தேக்குகள் நடுவே மிளகு செடிகளை ஊடுபயிராக நடவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

குறிஞ்சிமலர் கூறியதாவது: என் தந்தை திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அம்மா கூலி தொழிலாளி.படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடி அலைந்தேன். சில இடங்களில் வேலை கிடைத்தாலும் சுதந்திரம் இல்லை. இதனால் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான வேலை என யோசித்த போது விவசாயம் தான் சரி என முடிவு செய்தேன். முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'பி.டெக். படிக்க 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். இனி திருமணம் செய்ய வேண்டும். அதற்கு நல்ல வேலை வேண்டும்' எனக் கூறினர்.ஆனால் பல கட்ட போராட்டத்திற்கு பின் அனுமதி கிடைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சண்முகசுந்தரம் என்பவரை அணுகி விவசாயம் தொடர்பான ஆலோசனையை பெற்றேன்.இந்த நிலத்தை உழுது 1500 தேக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்துக்கு தேவையான உரங்களை தானே தயாரித்து நஞ்சில்லா விவசாயத்தை மேற்கொள்ள உள்ளேன்.இவ்வாறு அவர்கூறினார்.

இயற்கை ஆர்வலர் சண்முக சுந்தரம் கூறுகையில் ''குறிஞ்சிமலர் விவசாயத்தை தேர்ந்தெடுத்தது சரியான திசை. ஆர்வம் மிக்க துடிப்பான பெண்.அவரது முயற்சிக்கு எங்கள் குழு சார்பில் தொடர்ந்து ஆலோசனை கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறோம்'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chichu Damal - Panama,பனாமா
25-அக்-201916:15:13 IST Report Abuse
Chichu Damal நீங்கள் உண்மையிலேயே பெயருக்கு ஏற்றாற்போல் குறிஞ்சி மலர்தான். வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
Naren - Chennai,இந்தியா
20-அக்-201917:59:35 IST Report Abuse
Naren எவ்வளவு பெரிய நிறுவனங்களில் எத்தகைய பெரிய பதவியில் பணி புரிந்தாலும் வெறும் பணியாளர்தான். இங்கு பத்து பேருக்கு வேலை கொடுத்து தானும் உழைத்தாலும் முதலாளி. மக்களுக்கு உணவு படைக்கும் விவசாய தொழில் சிறப்பான தேர்வு. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Senthils - Riyadh,சவுதி அரேபியா
20-அக்-201916:07:01 IST Report Abuse
Senthils வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X