பொது செய்தி

தமிழ்நாடு

நாங்களும் சாதித்துக் காட்டுவோம்!

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019
Advertisement

கடவுளின் குழந்தைகளான, மூளைவளர்ச்சி குன்றியவர்களையும், சொந்தக்காலில் நிற்க வைக்க முடியும் என்கிற உயரிய நோக்கத்துடன், துடியலுார், வி.எஸ்.கே., நகரில், 'வித்ய விகாசினி' என்கிற பெயரில், முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது, 14 வயதுக்கு மேற்பட்ட மூளை வளர்ச்சி குன்றியோருக்கான இல்லம்.






இந்த இல்லத்தில், மூளை வளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம், மூளை முடக்கு வாதம் மற்றும் கூட்டு ஊனத்தால் பாதிக்கப்பட்ட, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இவர்கள், வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான வாய்ப்பு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான புக் பைண்டிங், டைரி மற்றும் நோட்டு, புத்தகங்கள் தயாரிப்பு, விடைத்தாள் தயாரிப்பு பணிகளை செய்கின்றனர். சாக்பீஸ் தயாரிப்பு, பள்ளி கேன்டீனுக்கான பேக்கரி உணவு தயாரிப்பு, இல்லத்தில் உள்ள கோசாலையில் பால் பண்ணை மேலாண்மை, உணவு, காகித பிளேட்டுகள் தயாரிப்பு என, விரும்பிய பணியில், உற்சாகமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.





இயக்குனர் சுரேஷ் கூறியதாவது: மூளை வளர்ச்சி குன்றியவர்களில், கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. முதலில், அடிப்படை பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்கிறோம். பின், தனித்திறனை கண்டறிந்து, படிப்படியாக தொழில் பயிற்சி அளிக்கிறோம்.
ஒருங்கிணைப்பாளர் உதவியுடன், புத்தக பைண்டிங் மற்றும் பேக்கரி பொருட்கள் மட்டும் மாணவர்கள் செய்து வந்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ரூ.10 லட்சம் நிதியுதவியில், கடந்தாண்டு முதல் ஆட்டோமேட்டிங் பிரிண்டிங் மெஷின் மூலம், அனைத்து டெஸ்க் டாப் பப்ளிசிங் வேலைகளையும் மாணவர்களே செய்து வருகின்றனர்.மாணவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கேற்ப ஊதியமும் வழங்கப்படுகிறது.






அலங்கார பொருட்கள் தயாரிப்பு, போட்டோகிராபி, காகித பை தயாரிப்பு போன்ற மேலும் பல பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். பிரிண்டிங் பிரஸ், உணவகங்கள், தனியார் நிறுவனங்களில் பணி, சுய தொழில் என, எதிர்காலத்தில் சொந்தக்காலில் நிற்க வைப்பதே இலக்கு.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X