காஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து| PM Modi puts off Turkey visit amid widening rift between New Delhi, Ankara | Dinamalar

காஷ்மீர் பிரச்னையை விமர்சித்த துருக்கி:மோடியின் பயணம் ரத்து

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (61)
Share
PM Modi puts off Turkey visit காஷ்மீர் பிரச்னை, விமர்சனம்,துருக்கி,கண்டனம்: மோடி,

புதுடில்லி: கடந்த செப்டம்பரில் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னை பற்றி, துருக்கி அதிபர் எண்ட்ரோகன் பேசியது, காஷ்மீர் பிரச்சினையை “நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டுமே தவிர மோதல் மூலம் கிடையாது. “காஷ்மீர் மோதல்” சர்வதேச சமூகத்திடமிருந்து போதுமான கவனத்தை பெறவில்லை,” என பேசினார். துருக்கி அதிபரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது.


latest tamil news


இந்நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி இம்மாத இறுதியில் 2 நாள் பயணமாக துருக்கி செல்ல உள்ளார். சவுதி அரேபியா சென்று அங்கிருந்து துருக்கி தலைநகர் அங்காரா செல்ல இருந்தார். அங்கு அக்.27-28-ம் தேதிகளில் மெகா முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. துருக்கி அதிபரின் பாக். ஆதரவு பேச்சையடுத்து மோடியின் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X