மதுரை: மேலுார் கோட்டைக்கிணறு ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:எனது 14 வயது மகன் மனவளர்ச்சி குன்றியவர். மனநலம் குன்றியோர் சிறப்புப் பள்ளியில் படித்தார். ஏப்.,28 ல் வீட்டருகே உள்ள கழிப்பறைக்கு செல்வதாகக் கூறினார். ஆனால் வீடு திரும்பவில்லை. மேலுார் போலீசில் புகார் அளித்தோம். விசாரணையில் முன்னேற்றம் இல்லை.வடமாநிலத்தினர் சிலர் சிறுவர்களை கடத்தி கொத்தடிமையாக நடத்தி உடலுறுப்புகளை திருடி விற்பதாக தகவல் பரவுகிறது. விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE