மாணவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராகுல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராகுல்

Added : அக் 20, 2019
Share
ராகுல், ஹெலிகாப்டர், வானிலை, தரையிறக்கம், கிரிக்கெட்

ரேவாரி : மோசமான வானிலை காரணமாக, கல்லுாரி மைதானத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களுடன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கிரிக்கெட் விளையாடினார்.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு, வரும் 21ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள மகேந்திரகர் மாவட்டத்தில், தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் கலந்து கொள்வற்காக, காங்., முன்னாள் தலைவர் ராகுல், நேற்று முன் தினம் சென்றார்.

கூட்டம் முடிந்த பின், ஹெலிகாப்டரில் டில்லி புறப்பட்டார். அப்போது மோசமான வானிலை காரணமாக, ரேவாரி மாவட்டத்தில் உள்ள, கே.எல்.பி., என்ற கல்லுாரியின், விளையாட்டு மைதானத்தில், ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, கல்லுாரி மைதானத்தில், மாணவர்கள் சிலர், கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய ராகுல், மாணவர்களை பார்த்ததும், அவர்களிடம் சென்றார். அவர்களுடன் சேர்ந்து, கிரிக்கெட் விளையாடினார். மாணவர்களை பந்து போடச் சொல்லி, ராகுல், 'பேட்டிங்' செய்தார்.

வானிலை சரியானதை அடுத்து, ஹெலிகாப்டர் புறப்பட தயாரானது. மாணவர்களிடம் இருந்து விடை பெற்ற ராகுல், அவர்களுடன், 'செல்பி' படம் எடுத்துக் கொண்டார். பின், புறப்பட்டு சென்றார். மாணவர்கள் சிலர், இதை மொபைல் போனில், வீடியோ படம் எடுத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X