பொது செய்தி

இந்தியா

இன்டர்போல் கூட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி : 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பின், 91வது ஆண்டு பொதுக் குழு கூட்டம், 2022ல், டில்லியில் நடைபெறுகிறது.






இது தொடர்பாக, நேற்று முன் தினம் நடந்த ஓட்டெடுப்பில், பெருவாரியான உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்ததை அடுத்து, 25 ஆண்டுகளுக்கு பின் இந்த வாய்ப்பு, மீண்டும் இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடு ரீதியிலான ஒத்துழைப்பை பரஸ்பரம் அளிக்கவும், 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பு, 1923ல், உருவாக்கப்பட்டது.


ஓட்டெடுப்பு

இதன் தலைமையகம், ஐரோப்பிய நாடான, பிரான்சில் உள்ள லியானில் அமைந்துள்ளது.. இந்த அமைப்பில், இந்தியா உட்பட, 194 நாடுகள், உறுப்பினர்களாக உள்ளன. இதில், 1949ல், இந்தியா உறுப்பினராக இணைந்தது. இந்த அமைப்பின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை, ஒவ்வோர் ஆண்டும், உறுப்பினராக உள்ள ஒரு நாடு நடத்துவது வழக்கம். இதற்காக, ஓட்டெடுப்பு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் நாட்டுக்கு, இந்த வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த பொதுக் குழு கூட்டத்தில், அமைப்பின் கொள்கைகளை பாதிக்கும் முக்கிய முடிவுகள், சர்வதேச ஒத்துழைப்புக்கு தேவையான வளங்கள், பணியாற்றும் முறை, நிதி தேவைகள் உட்பட, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். இன்டர்போலின் பொது செயலர், ஜெர்கன் ஸ்டாக், கடந்த ஆகஸ்டில் இந்தியா வந்திருந்தார்.

அப்போது, 'இன்டர்போல் அமைப்பின், 91வது பொதுக் குழு கூட்டத்தை, 2022ல், இந்தியாவில் நடத்த வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா விருப்பம் தெரிவித்தார். இந்நிலையில், இன்டர் போல் அமைப்பின், 88வது பொதுக் குழு கூட்டம், தென் அமெரிக்க நாடான, சிலி தலைநகர், சான்டியாகோவில், நேற்று முன் தினம் நடந்தது. இதில், சி.பி.ஐ., இயக்குனர் ரிஷி குமார் ஷுக்லா, இந்தியா சார்பில் பங்கேற்றார்.






பெரும்பான்மை

அப்போது, 2022ல், இன்டர்போல் அமைப்பின், 91வது பொதுக் குழு கூட்டத்தை, இந்தியாவில் நடத்துவது குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டது. இதன் மீது, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள, 194 உறுப்பு நாடுகளில், பெரும்பாலான நாடுகள், இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தன. இதையடுத்து, இந்த ஓட்டெடுப்பில், இந்தியா வெற்றி பெற்றது. இது குறித்து, சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர், நிதின் வாகன்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, இன்டர்போல் பொதுக்குழு கூட்டத்தை, 2022ல், இந்தியாவில் நடத்த, மத்திய அரசு திட்டமிட்டது.

அதற்கான ஓட்டெடுப்பில், இந்தியாவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது.இதற்கு முன், இன்டர்போல் அமைப்பின் பொதுக் குழு கூட்டம், 1997ல், இந்தியாவில் நடந்தது. 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் இந்த வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-அக்-201908:29:52 IST Report Abuse
Nallavan Nallavan ஊழல் மலிந்துள்ள நாட்டில் இன்டர்போல் கூட்டம் ???? ஹி ...... ஹி ...... ஹி ......
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-அக்-201907:13:25 IST Report Abuse
blocked user சூப்பர். இன்னும் பல கிரிமினல்களுக்கு ஆப்பு வைக்க உதவியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X