தமிழிசைக்கு தனி மரியாதை

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: மாநில கவர்னர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அனைத்து கவர்னர்களும், உள்துறை அமைச்சரை சந்தித்து, ஆலோசனை நடத்துவர். சில கவர்னர்கள், பிரதமரையும் சந்திப்பர்.






ஆனால், சமீப காலமாக, கவர்னர்களைச் சந்திப்பை, பிரதமர் மோடி தவிர்த்து வருகிறார்.'முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும்' என கவர்னர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், 'எதுவாக இருந்தாலும் உள்துறை அமைச்சரிடம் சொல்லுங்கள்; முக்கியமான விஷயம் என்றால் உள்துறை அமைச்சர், பிரதமரிடம் பேசுவார்' என, பிரதமர் அலுவலகத்திலிருந்து சொல்லப்படுகிறதாம்.





தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தர ராஜன் பதவியேற்ற பின், சமீபத்தில் டில்லி வந்திருந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பின், பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டார். பிரதமர் அலுவலகத்திலிருந்து, உடனடியாக அழைப்பு வந்தது.மோடியிடம், தெலுங்கான விவகாரங்கள் குறித்து, தமிழிசை ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் நிலை குறித்தும், பேசியதாக சொல்லப்படுகிறது.

கவர்னர்களைச் சந்திக்க தவிர்க்கும் பிரதமர், தமிழிசையை சந்திக்க எப்படி ஒப்புக் கொண்டார் என, டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் ஆச்சர்யப்படுகின்றன. நம்ம ஊர் தமிழிசைக்கு, பிரதமர் தனி மரியாதை கொடுத்தது, அதிகாரிகள் வட்டாரத்தை மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும், ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
25-அக்-201910:43:16 IST Report Abuse
kowsik Rishi தமிழ் நாட்டில் தேர்தல் வரும்போது - கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று சொல்லிக்கொள்ள தான் . தமிழிழை கவர்னர் மோடியை பார்த்தார். தமிழ் நாட்டில் பாஜக முதல்வர் பதவிக்கு இப்போ பன்னீர்செல்வம் மட்டும் தான் ஒரு போட்டி வேண்டாமா அதான் கவர்னர் தமிழிசை தேர்தல் நேரத்தில் தமிழ் நாட்டில் இருப்பார் பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
23-அக்-201904:44:30 IST Report Abuse
Vetri Vel அழகான அம்மணி...
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-அக்-201910:02:41 IST Report Abuse
oce நல்ல பெண்மணி மிக நல்ல பெண் மணி. தமிழக அதிமுக ஆட்சியில் பாஜக பங்கேகும் நாள் நெருங்கி விட்டது அப்போது இந்த நல்ல பெண்மணி தான் தமிழக ஆளுநர்.
Rate this:
Share this comment
Jegan - Nagercoil,இந்தியா
22-அக்-201912:35:42 IST Report Abuse
Jeganதமிழர் தமிழக ஆளுநராக வர முடியாதே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X