ராகுலின் மாறாத பிரசார பாணி

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (22)
Advertisement

புதுடில்லி : ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல், நாளை நடக்கிறது. காங்கிரஸ் தரப்பில் சோனியா பிரசாரத்திற்கு வருவார் என முதலில் சொல்லப்பட்டது. இரு மாநில காங்கிரசாரும் உற்சாகமாக இருந்தனர். ஆனால், கடைசியில் உடல்நிலையை சுட்டிக்காட்டி, டாக்டர்கள் அறிவுரை கூறியதால், கடைசி நேரத்தில், ரத்து செய்துவிட்டார், சோனியா.






ஆனால், அவருக்கு பதிலாக, ராகுல் பிரசாரத்துக்கு ஆஜராகி வருகிறார். அம்மாவை எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்களுக்கு, மகனின் பிரசாரம், சுவாரஸ்யம் அளிக்கவில்லை. போகும் இடமெல்லாம், 'மோடி ஒரு பிக்பாக்கெட்; ரபேல் போர் விமானத்தில் ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் அடித்துவிட்டார்; அதனால் தான் ரபேல் விமானத்தை பெற்றுக் கொள்ள, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் சென்றார்' என, பேசி வருகிறார், ராகுல். லோக்சபா தேர்தலிலும், இதே ரபேல் விமான ஊழல் குற்றச்சாட்டுகள் தான், ராகுலின் பிரதான பிரசாரமாக இருந்தது. அனால், இதுவே மோடிக்கு சாதமாகிப் போனது.






விளைவு

300க்கும் அதிகமான தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றது. மீண்டும், ராகுலின் அதே பாணி பிரசாரத்தால், வெறுத்துப் போயுள்ளனர் காங்கிரஸ் தொண்டர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும். ராகுலின் பிரசார பாணி மாறாவிட்டால், ஜெயிக்கப் போகின்ற ஒரு சில தொகுதிகளும் போய்விடும் போலிருக்கிறதே என நொந்து போயுள்ளனர், இரண்டு மாநில காங்கிரசாரும். ஆனால், 'ராகுல் தான் எங்களின் பிரசார பீரங்கி; அவர், மோடியை எவ்வளவு திட்டுகிறாரோ, அவ்வளவும் எங்களுக்கு வெற்றிதான்' என்கின்றனர், பா.ஜ., கட்சியினர்

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
cbonf - doha,கத்தார்
20-அக்-201917:39:30 IST Report Abuse
cbonf ஹர்யனாவிலும் மஹாராஷ்டிரத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சீட்டுக்களுக்கு மேல் கிடைப்பது கடினம். சரத் பவருக்கும் அவரது சிஷ்யர் பரபிஉல் படேலுக்கு தாவூத் இப்ராஹிமுடன் கூட தொடர்பு உள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகையால் NCP கட்சிக்கும் 4 அல்லது 5 சீட்க்கு மேல் கிடைக்காது
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
20-அக்-201916:05:38 IST Report Abuse
bal குடும்ப புத்தி.. அப்படிதான். இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-அக்-201911:16:02 IST Report Abuse
blocked user வால் எப்படி நேராகும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X