சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியுடன் சென்று நகைகள் தேர்வு: கொள்ளையன் தகவல்

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (35)
Advertisement
மனைவி, நகைகள் தேர்வு, லலிதா ஜுவல்லரி, கொள்ளையன், சுரேஷ், தினமலர், முருகன், wife, jewels,  lalitha jewels, robbery, suresh, dinamalar

திருச்சி: லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிப்பதற்கு முன் முருகன் தன் மனைவியுடன் சென்று நகைகளை தேர்வு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான முருகன் 45, சுரேஷ் 28 ஆகியோர் நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர். இதில் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த சுரேஷை 14ம் தேதி திருச்சி மாநகர போலீசார் ஏழு நாட்கள் கஸ்டடி எடுத்தனர்.சுரேஷிடம் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஐந்து நாட்களாக நடந்து வரும் விசாரணையில் சுரேஷ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

சுரேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: 2018ல் சென்னை அண்ணாநகரில் நடந்த கொள்ளையை அரங்கேற்றினோம். இவ்வழக்கில் எங்களை கைது செய்யாமல் இருக்க அந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணமயமான இன்ஸ்பெக்டர் மற்றும் இரு போலீசாருக்கு 30 லட்சம் ரூபாயை இரு தவணைகளாக கொடுத்தோம்.மேலும் தாய்மாமன் முருகன் என்னை ஹீரோவாக வைத்து தெலுங்கு படம் தயாரித்தார். தற்போது இளம் முன்னணி நடிகையாக இருப்பவருக்கு படத்தில் நடிக்க பரிசாக மட்டும் திருச்சி வங்கியில் கொள்ளையடித்த நகைகளை கொடுத்தேன்.தவிர திருவாரூரில் எஸ்.பி.யாக இருந்தவருக்கு 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக கொடுத்தோம்.





திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளைஅடிக்கும் முன் முருகன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடைக்கு சென்று நகை வாங்குவது போல கடையை நோட்டமிட்டார். திருச்சி லலிதா ஜுவல்லரி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கும் முன் சம்மந்தப்பட்ட பகுதியில் முருகன் தன் குடும்பத்துடன் வீடு வாடகைக்கு பிடித்து தங்கியிருந்தனர். இவ்வாறு சுரேஷ் கூறியுள்ளார்.

இதுதவிர எந்தெந்த இடங்களில் கொள்ளை அடிக்கப்பட்டது அந்த நகை, பணம் எல்லாம் எங்கே உள்ளது அவர்களுக்கு உதவிய அரசியல்வாதிகள், போலீசார் ஆகியோர் குறித்தும் சுரேஷ் கூறியுள்ளார். இவை முழுமையாக விசாரணைக்கு செல்லும்பட்சத்தில் பல போலீஸ் அதிகாரிகள் சிக்குவர் என்று தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-அக்-201902:23:11 IST Report Abuse
 nicolethomson அதுவும் தெலுங்கு படங்கள் மாத்திரம் தயாரிப்பானாம்
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
23-அக்-201919:49:34 IST Report Abuse
Nathan இந்த கேங்கே தெற்றுப்பல் முன்னால் தெரிய இருக்கே. கேவலம், இவன் வியாதியை கொடுத்தானா, வாங்கி கொண்டானா?
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
22-அக்-201904:50:15 IST Report Abuse
meenakshisundaram நல்ல உதாரண தம்பதியினர் ,மனைவி சொல்லை தட்டாத கணவன் ,அவனுக்கு நன்கெ உதவி செய்த மனைவி வள்ளுவர் வழியினிலே வாழ்ந்து காட்டுவோம் இவர்களுக்கு திமுக -வள்ளுவர் வாசுகி விருந்து வழங்கி திராவிட கலாச்சாரத்தை நிலை நிறுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X