பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Rain, Warning, Weather, Rainfall, மழை, ஆரஞ்சு எச்சரிக்கை, இந்திய வானிலை மையம், வானிலை, கனமழை, பலத்த மழை

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிருபர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.உள்மாவட்டங்களில் லேசான மழைக்கும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில்,
கடலூர், புவனகிரியில் 9 செ.மீ.,
நாகர்கோவிலில் - 8 செ.மீ.,
குன்னூரில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 2 நாட்கள், குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


சென்னையில் காலை பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் சைக்கிளில் சாகசம் செய்து விளையாடிய சிறுவன்.இடம் : பெசன்ட் நகர்.

சென்னையில் காலை பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் சைக்கிளில் சாகசம் செய்து விளையாடிய சிறுவன்.இடம் : பெசன்ட் நகர்.





ஆரெஞ்சு அலெர்ட்


தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று (அக்., 20) முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.


சென்னையில் காலை பெய்த மழையால் பாலவாக்கம் வ.ஊ.சி தெருவில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.

சென்னையில் காலை பெய்த மழையால் பாலவாக்கம் வ.ஊ.சி தெருவில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்.



இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அக்., 22 வரை இடி, மின்னலுடன் கூடிய மிக பலத்த மழையும், அக்., 23, 24 தேதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த நாட்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்யக் கூடும். கேரளா கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் 45-55 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


.

.



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201905:47:36 IST Report Abuse
padma rajan தமிழகம் என்றால் இதில் சென்னை இருக்கிறதா இல்லையா. உளுந்தூர் பேட்டையில் பலத்த மழை சென்னையில் கடும் வெப்பம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-அக்-201919:34:42 IST Report Abuse
K.Sugavanam பலே.பலே..
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-அக்-201911:50:43 IST Report Abuse
Lion Drsekar மொத்தமாக ஆரஞ்சு தமிழகத்துக்கு என்று போட்டால் எப்படி, அரசியல் கட்சிகளைப்போல் வருண பகவானும் டிவிசன் டிவிஷனாக மழை பொழிகிறான், ஒரே தெருவில் மூன்று டிவிசன் இருக்கிறது, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைக்கு ஒருபுறம் சென்னை 34 சுரங்கப்பாதை கடந்தால் சென்னை 94 இரண்டு நிமிடம் நடந்தால் அதே தெருவில் சென்னை 29 .அதிசயம் ஆனால் உண்மை சென்னை 34 லில் கனமழை , சென்னை 29 இல் மழைக்கு உண்டான அறிகுறியே காணோம், நாம் கேட்டது போல் முப்பது முக்கோடி இந்தியர்களையும் கெடுத்துவிட்டோமோ ? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X