பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் சென்றன

Added : அக் 20, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணிக்காக தேர்தல் அலுவலர்கள் மற்றும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நாளை இடைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி நாங்குநேரி தொகுதி முழுவதும் முழு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் மொத்தம் 170 மையங்களில் 299 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1460 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையிலும் தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதி 2571 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளன. 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 71 மையங்களில் 146 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1196 இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது
இதே போல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விக்கிரவாண்டி தொகுதியிலும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-அக்-201914:06:33 IST Report Abuse
Lion Drsekar குறுநில மன்னர்களின் பரம்பரைக்கு பெட்டி சென்றுவிட்டது, மக்களுக்கும் இதே போன்று மின்னனு இயந்திரங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், மக்களுக்காக பணியாற்றும் அல்லவா? தவறாக இருந்தால் மன்னிக்கவும், எல் கே ஜி முதல் இறந்து போகும் அமரர் வரை யாருக்குமே நிம்மதி இல்லை, ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் தினம் தினம் பல இன்னல்கள், தலைமுறைக்கும் அது தொடர்கிறது, விடிவு பிறக்குமா என்று ஏங்கிக்கொண்டு இருக்கும் வாக்காளர்களுக்கு வழி பிறக்கவில்லையே? அதிரடியாக நான் மக்களின் பிரநிதி, எனக்கு எதுவுமே வேண்டாம் என்று துணிந்து மக்களுக்காக பணியாற்ற யாராவது ஒருவர் வந்தாலே போதும், அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அனைத்தும் மக்கள் கொடுப்பார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-அக்-201913:17:15 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் முடிந்ததும் கலெக்டர் ஆபீசுக்கு ‘ஸ்பெஷல்’ யந்திரங்கள் ஒரு இருபதாவது போகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X