காங்கிரசால் தான் பிரிந்தது என சொல்லுங்கள்: கபில் சிபல்

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (61)
Advertisement

புதுதில்லி: காங்கிரஸ் ஆட்சியால் தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி, வங்கதேசம் என பிரிந்து தனி நாடானது என பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் கூற வேண்டும் என கபில் சிபல் கூறியுள்ளார்.





காங்., மூத்த தலைவரான கபில் சிபல், நிருபர்களை சந்தித்து கூறியதாவது: மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்களில் பாஜ., தலைவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக 370வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை கூறி வருகிறது. பிரதமர் மோடிக்கு 370வது பிரிவை மட்டுமே நினைவில் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு பாகிஸ்தான் பிளவுப்பட்டது குறித்து தெரியாது. பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த வங்கதேசத்தை காங்., ஆட்சியில் தான் அந்நாட்டிடம் இருந்து பிரித்தோம். இந்த நடவடிக்கைக்காக காங்., கட்சியை மோடி புகழ வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கான தைரியம் அவருக்கு இல்லை.




சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே 370வது பிரிவை பற்றி பேசுகிறீர்கள். ஆனால், மக்கள் துன்பப்படுவது அவருக்கு தெரிவதில்லை. ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வளர்ச்சி விகிதம் என அனைத்திலும் ஹரியானா, மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை விட காஷ்மீர் மேம்பட்டு தான் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து கைதாகும் இந்தியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. அவர்கள் வேலை தேடி தான் நாட்டை விட்டு வெளியேறி செல்கின்றனர். இதற்கு ஐந்தரை ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மோடி பதிலளிக்க வேண்டும்.




மேலும், உலகளாவிய பட்டினி தரவரிசைப் பட்டியலில் இந்தியா 102வது இடத்தில் உள்ளது. இனியாவது மோடி, அரசியலில் குறைவான கவனத்தையும், நாட்டு மக்கள் மீது அதிக கவனத்தையும் செலுத்த வேண்டும். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு வளா்ச்சி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக சரிந்ததாக பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கணித்துள்ளன. இருந்த போதிலும் பொருளாதாரம் நன்றாக இருப்பதாகவும், உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் மோடி அரசு தொடா்ந்து கூறி வருகிறது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
21-அக்-201909:54:24 IST Report Abuse
சுந்தரம் உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
22-அக்-201914:55:03 IST Report Abuse
s.rajagopalanஅப்போ இருந்தது இந்திரா காந்தி ...தேச பக்தி உள்ள பரம்பரை ....இப்போ இருப்பது 'சோனி' காந்தி....இத்தாலிக்காரி......
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201907:45:21 IST Report Abuse
கதை சொல்லி பாகிஸ்தான் என ஒரு நாடு உருவானதுக்கும் காங்கிரஸ்தான் காரணம்... முதல்ல அத சொல்லுங்க... அதனால்தான் காங்கிரஸுக்கு பாக் மீது அளவில்லா பாசம்
Rate this:
Share this comment
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201905:44:58 IST Report Abuse
 rajan மின்விசிறிக்கு ஒருநாளைக்கு வாடகையாக 2000 ரூபாய் கொடுத்த காங்கிரஸ் அரசுக்கு பிஜேபி அரசை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. காங்கிரஸின் பொற்காலம் நரசிம்மராவோடு முடிந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X