பொது செய்தி

இந்தியா

பாக்., சிறுமிக்கு விசா: காம்பீர் உதவி

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
Gautam Gambhir, Pakistani Girl, Medical Visa,

புதுடில்லி: பாகிஸ்தானை சேர்ந்த 7 வயது சிறுமி, இந்தியாவில் இதய அறுவை சிகிச்சைக்காக, விசா பெறுவதற்கு, பா.ஜ., எம்.பி.,யும் இந்திய அணி வீரருமான கவுதம் காம்பீர் உதவி செய்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த 7 வயது சிறுமி ஒமைமா அலி. இருதய பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமி இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்க பா.ஜ., எம்.பி.,யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் உதவியுள்ளார். அந்த சிறுமிக்கும், பெற்றோருக்கும் விசா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


latest tamil news


இதற்கு பதில் அளித்து காம்பீருக்கு ஜெய்சங்கர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒமைமா அலிக்கும், அவரது பெற்றோருக்கும் விசா வழங்க நடவடிக்கை எடுக்கும்படி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காம்பீர் கூறுகையில், என்னை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப், அந்த சிறுமி நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். தற்போது, அவருக்கு அறுவை சிகிச்சை பெற வேண்டியுள்ளது. விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால், அவருக்கு விசா கிடைக்க உதவி செய்யவேண்டும் எனக்கூறினார். இதனால், அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று கொண்டு, விசா வழங்கிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தான் சிறுமி, சாலை மார்க்கமாக, அட்டாரி எல்லை வந்தடைகிறார்.


latest tamil news


பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுடன் எனக்கு பிரச்னை உள்ளது. ஆனால், அண்டை நாட்டு மக்களுடன் எந்த பிரச்னையும் இல்லை. 6 வயது சிறுமி, இந்தியாவில் சிகிச்சை பெற முடியுமானால், இதனை விட சிறந்தது எது இருக்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
grg - chennai,இந்தியா
20-அக்-201921:53:14 IST Report Abuse
grg Because he s from bjp. Some may find fault with this also
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
20-அக்-201916:10:59 IST Report Abuse
pattikkaattaan குழந்தைக்கு உதவியது நல்ல செயல் ... பாராட்டுக்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
20-அக்-201915:11:06 IST Report Abuse
Pannadai Pandian do the operation and related medicine free of cost. May be the child is poor also.....let it be a lesson to Pakistani and indian moorkans…..
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-அக்-201905:39:01 IST Report Abuse
கதிரழகன், SSLCஒரு உருப்படியான ஆசுபத்திரி கெடையாது, நம்மொளோட சண்டை, மூர்க்கனுக்கு குண்டு வெக்க செலவு செய்யுறானுவ. அந்த நாட்டை ஒசத்தியா பேசுறானுவ நம்ம ஊரு அரபி அடிமைங்க. இப்படி இருந்தா விளங்குமா நாடு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X