பொது செய்தி

இந்தியா

மாமல்லபுரத்தில் பிரதமர் எழுதிய கவிதை

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
பிரதமர் மோடி, மாமல்லபுரம்,கவிதை, சீன அதிபர், ஜின்பிங், மோடி, நரேந்திர மோடி, Mamallapuram, Modi, Pm Modi, Jingping, chinese president, poet

புதுடில்லி: சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி, கடற்கரையில் ஓய்வு நேரத்தில் இருந்த போது, கடல் ஆற்றல் குறித்து பாராட்டி கவிதை எழுதியுள்ளார்.

அந்த கவிதையை பிரதமர் அவரது டுவிட்டரில் தமிழில் மொழிபெயர்த்து, வெளியிட்டுள்ளார். அந்த கவிதை விவரம் கீழே தரப்பட்டுள்ளது.


latest tamil news

அலைகடலே! அடியேனின் வணக்கம் !அளப்பரிய, முடிவற்ற,
ஒப்பில்லாத, வர்ணனைகளைக்
கடந்த,நீலக்கடலே
உலகிற்கு உயிரளிக்கும்நீ
பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உவைவிடம்


அலைகடலே! அடியேனின் வணக்கம்!வெளித்தோற்றத்திற்கு
கோபமாய் வீரத்துடன்
பேரிரைச்சலோடு எழும் அலைகள்
-உன் வலியா? வேதனையா?
துயரமா? எதன் வெளிப்பாடு?
இருந்த போதிலும் உன்னை
கலக்கமின்றி, தடுமாற்றமின்றி
உறுதியுடன் நிற்க செய்கிறது
உன் ஆழம்.

அலைகடலே!
அடியேனின் வணக்கம்.

உன்னிடம் உள்ளது
எல்லையில்லாத வலிமை.
முடிவில்லாத சக்தி ஆனாலும்
பணிதலின் பெருமையை
நிமிடந்தோறும் நவில்கிறாய் - நீ
கரையைக் கடக்காமல்,
கண்ணியத்தை இழக்காமல்.


அலைகடலே! அடியேனின் வணக்கம்.கல்வித் தந்தையாய்
ஞான கருவாய்

வாழ்க்கைப் பாடத்தை
போதிக்கிறாய் நீ
புகழுக்கு ஏங்காத.
புகலிடத்தை நாடாத
பலனை எதிர்நோக்காத
உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்.


அலைகடலே! அடியேனின் வணக்கம்நிற்காமல் சளைக்காமல்
வீசும் உன் பேரலைகள்
'முன்னேறுவதே வாழ்க்கை' என்ற
உபதேச மந்திரத்தை உணர்த்தும்
முடிவில்லாத பயணமே
முழுமையான உன் போதனை.


அலைகடலே! அடியேனின் வணக்கம்விழும் அலைகளிலிருந்து
மீண்டும் எழும் அலைகள்
மறைந்து
மீண்டும் துவங்கும் உதயம்
பிறப்பு - இறப்பு என்பது தொடர் வட்டம்
உனக்குள் மடிந்து - பின்
உயிர்த்தெழும் அலைகள்
மறுபிறப்பின் உணர்வூட்டம்அலைகடலே! அடியேனின் வணக்கம்பழம்பெரும் உறவான
சூரியனின் புடமிட்ட
தன்னையழித்து,
விண்ணைத் தொட்டு
கதிரவனை முத்தமிட்டு
மழையாய்ப் பொழிந்து


நீர்நிலைகளாய் சோலைகளாய்
மகிழ்ச்சி மனம் பரப்பி
படைப்பை அலங்கரித்து - எல்லோருக்கும்
வாழ்வளிக்கும் நீர்நீ.அலைகடலே! அடியேனின் வணக்கம்
வாழ்வின் பேரழகு நீ-
விஷத்தை அடக்கிய
நீலகண்டன் போல - நீயும்
எது வந்தாலும் ஏற்றுகொண்டு
புது வாழ்வைப்
பிறர்க்களித்து
சொல்கிறாய்
சிறந்த வாழ்வின்
மறைபொருளை.


அலைகடலே அடியேனின் வணக்கம்latest tamil newsஇவ்வாறு மோடி கவிதை எழுதியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
20-அக்-201921:25:40 IST Report Abuse
blocked user தாண்டவக்கோனுக்கு ஓவராக பேதியாகிவிட்டது போல.. ஒரே கருத்து வாந்திதான்.
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-அக்-201921:18:55 IST Report Abuse
தாண்டவக்கோன் "சூரியகாந்தியைப்போல் மேல் நோக்கியிருந்ததை, நாணலை போலெ தலைகுனிய செய்தேன் " - பொருளாதாரத்த பத்தின கவிதெ
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-அக்-201909:39:31 IST Report Abuse
Chowkidar NandaIndiaநிஜம் தானே. சூரியனை போல் ஊமையன் ஆட்சியில அண்ணாந்து இருந்த விலைவாசியை நாணல் லெவலுக்கு குறைக்க செய்தேன் - ஒசந்திருந்த விலைவாசியை பத்தியும் எடுத்துக்கலாம். சரிதானே தாண்டு....
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
20-அக்-201920:58:54 IST Report Abuse
Nallavan Nallavan குப்பை வண்டிக்காரன் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டான் போலிருக்கே ........ ம்ம்ம்ம்ம் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X