பொது செய்தி

இந்தியா

35 பாக்.,பயங்கரவாதிகளை கொன்றது இந்திய ராணுவம்?

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (63)
Share
Advertisement
பாகிஸ்தான், ராணுவம், இந்தியா, பயங்கரவாதிகள், சுட்டுக்கொலை பீரங்கிகள்,  காஷ்மீர், ஆக்கிரமிப்பு காஷ்மீர், அத்துமீறல், எல்லை, india, pakistan, attack, terrorists,

ஜம்மு: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருந்த 35 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகள் ஊடுருவ செய்வதற்கு ஏதுவாக தாக்குதல் நடத்தியது. இதில்பொது மக்களில் ஒருவர் உள்பட, இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர் .மேலும் 3 பேரும் காயம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் , ஜெய்ஷ் இ முகம்மது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதின் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் பலத்த சேதமடைந்தன.


latest tamil news



மேலும், பயங்கரவாதிகள் செயல்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜூரா, அத்முஹம், குந்தலஷாகியில் செயல்பட்டு வந்த ஏழு பயங்கரவாத முகாம்களை குறி வைத்து நேற்று இரவு முதல் இந்திய ராணுவம் அதிரடியாக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் வரை, இந்தஆண்டு 2 ஆயிரம் முறை எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.


அமைச்சர் ஆலோசனை


இதன் இடையே,எல்லையில் உள்ள சூழ்நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சூழ்நிலையை கண்காணிக்க அறிவுறுத்திய அமைச்சர், தகவல்களை தனக்கு தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
25-அக்-201912:32:35 IST Report Abuse
ponssasi இது என்னவோ தேர்தல் நேரத்து உத்தி போல தோணுது.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-அக்-201906:15:12 IST Report Abuse
elakkumanan ஒரு சிலருக்கு, இதில் கருது சொல்ல என்ன இருக்கு ன்ற மனநிலை. உண்மை தானே..................டுமீளனா ஒரு தனி இனம் , அதற்கு ஒரு தனி குணம்..... இந்துன்னா திருடன்னு சொன்னவன்கிட்ட ஆதாரம் கேட்கமாட்டான். தை மாசம்தான் தமிழின் முதல் மாசம்னு திடீர்னு சொன்ன தமிழ் ஓனர் கிட்ட ஆதாரம் கேட்கமாட்டான். ஜெயிலுக்குள்ள இருக்குறவங்க, ஜாமீன்ல இருக்குறவுங்க, ஜாமீன் விண்ணப்பிச்சிருப்பவர்கள், திருடன், கொலைகாரன், ஓசி சோறு க்காக நாட்டையே காட்டி கொடுப்பவர்கள்................ இவங்க யாரவது சொன்னாதான் நாங்க கேப்போம்.நம்புவோம். இப்படிப்பட்ட டுமீல் இனம் தனி குணம் கொண்டதுதான். இனிமேல், இந்த மாதிரி தாக்குதல், சர்ஜிக்கல் நடவடிக்கைகள் நடக்கும்போது, முரசொலி, தீக்கதிர், சன் டிவி நிருபர்களை மொதவே போய், அந்த பக்கம் நிக்க சொல்லி, நல்லா படம் எடுக்க சொல்லணும். முடிஞ்சா......., விட்டது தொல்லை.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-அக்-201906:00:35 IST Report Abuse
elakkumanan ஆதாரம் கொடுங்கோ பாஸூ. நாங்க இந்தியாவில் இருந்து, இந்திய அரசிடம் இருந்து வரும் எந்த தகவலையும் நம்பமாட்டோம். போட்டோ கொடுங்க. போட்டோ இல்லாம நம்பணும்னா, வாட்சப்பில் போடுங்க. அப்போதான் நாங்க நம்புவோம். வாட்ஸாப்பில் தான் இன்றைய டும்மேலன்சுக்கு எல்லாமே பரிமாறப்படுகிறது. அந்த பாவப்பட்ட ஜீவனும், சிவந்த கண்களுடன் அதை நம்பிக்கொண்டு, forward செய்து புளகாங்கிதம் அடையுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X