அபிஜித்தை ஆதரிக்கும் ராகுல்

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (28)
Advertisement

புதுடில்லி: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெறவுள்ள இந்தியர் அபிஜித் பானர்ஜி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அபிஜித்துக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டுவிட் செய்துள்ளார்.






2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்தவர். இவர், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில், பொருளாதாரம் மோசமான சூழலில் இருப்பதாகவும், உடனடியாக சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், பொருளாதார சரிவை மீட்க, ஏழைகளின் கைகளில் பணபுழக்கம் இருக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.





அபிஜித் கருத்து பற்றி மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால் பானர்ஜி ஒருசார்புடைய சிந்தனையாளர் போன்று பேசுகிறார். காங்., கட்சியின் 'நியாய்' என்ற குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் திட்டத்தை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். அந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதைப் பற்றிச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை, என்றார்.





அமைச்சரின் இந்த கருத்துக்கு, 'என்னுடைய தொழில்முறையை மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பிவிட்டார், வேதனை அளிக்கிறது,' என அபிஜித் கூறினார்.
இதனையடுத்து, காங்., முன்னாள் தலைவர் ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் அபிஜித்துக்கு ஆதரவாகவும், பியூஸ் கோயலுக்கு கன்டனம் தெரிவித்தும் பதிவிட்டுள்ளார். ராகுலின் டுவிட்டர் பதிவு:
அன்புள்ள திரு பானர்ஜி, இந்த பெரியவர்கள் வெறுப்பால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், ஒரு தொழில்முறை என்னவென்று தெரியாது. நீங்கள் 10 ஆண்டுகளாக முயற்சித்தாலும் அதை அவர்களுக்கு விளக்க முடியாது. உங்களின் பணியால் லட்சக்கணக்கான மக்கள் பெருமை கொள்கிறார்கள். இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-201910:23:21 IST Report Abuse
பச்சையப்பன் நாங்க எல்லாம் அப்பவே ஒரு மாதிரி!! அமர்த்தியா குமர்த்தியா அபிஜித் குபிஜித் என்று யார் பேச்சையும் கேட்க மாட்டோம். மாராட்டியனும் அரியானா இந்திக் காரனும் மாத்தி அமுக்கி தள்ளினால் தான் ஏதாவது மாற்றம் வரும் இல்லை என்றால் திருவோடே சரணம் என்று அலைய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
20-அக்-201922:55:22 IST Report Abuse
Ganesan Madurai ஒஹோ பியுஷ் கோயலுக்கு ஒண்ணும் தெரியாது ஆனா காலேஜ் படுக்கமே போகாம புளுகின பெயிலு பப்பூ மட்டும் இந்த பக்கம் உருளைக்கிழங்க வுட்டு அந்த பக்கத்தால தங்கமா எடுக்குற பிஸினஸ் கிங்கு. பெயிலு பப்பூ வரி கட்டாம ஏமாத்துற அய்யோக்கியன் வாயே தொறக்கப்புடாது மொதல்ல.
Rate this:
Share this comment
Cancel
vv -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-201921:05:51 IST Report Abuse
vv CA piyush goyal😍
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X