இதே நாளில் அன்று

Added : அக் 20, 2019
Advertisement

அக்டோபர் 21, 1925

சுர்ஜித் சிங் பர்னாலா: ஹரியானா மாநிலம், அடேலி பேக்பூரில், 1925 அக்., 21ல் பிறந்தார். 1946ல், சட்டம் பயின்ற அவர், பர்னாலாவில், மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு, பர்னாலா தொகுதி, எம்.எல்.ஏ.,வானார். 1969ல், பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். 1977ல், லோக்சபா உறுப்பினரானார்.

மொரார்ஜி தேசாய் தலைமையிலான, மத்திய அரசில், விவசாயம் மற்றும் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். 1985ல், சிரோன்மணி அகாலி தளம் கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு, பஞ்சாப் முதல்வரானார். பின், 1990ல், தமிழக கவர்னரானார்.அரசியல் உள்நோக்கத்தோடு, அப்போதையமுதல்வர், கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., அரசை கலைக்க அறிக்கை தரும்படி,அப்போதைய பிரதமர் சந்திரசேகர் கோரினார். அதை ஏற்க மறுத்து, பதவியை துறந்தவர்.

2004 -- 2011 வரை மீண்டும், தமிழக கவர்னராகபணியாற்றினார். 2017 ஜன., 14ல் காலமானார்.

அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X