எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு எதிராக, 3,116 வழக்குகள் நிலுவை பதில் அளிக்க செயலர்களுக்கு கிடுக்கிப்பிடி

Updated : அக் 21, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 அரசுக்கு ,எதிராக, 3,116 வழக்குகள் ,நிலுவை ,பதில், அளிக்க செயலர்களுக்கு ,கிடுக்கிப்பிடி

தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள் தொடர்பாக, நீதிமன்றங்களில், 3,116 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளுக்கு, விரைந்து பதில் மனுக்களை தாக்கல் செய்யும்படி, துறை செயலர்களை, அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில், அரசு துறைகள் வாயிலாக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்டப் பணிகளில் குறைபாடுகள் மற்றும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பொதுமக்களோ, தனியார் நிறுவனத்தினரோ, நீதிமன்றங்களை நாடுகின்றனர்.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகள் தொடர்பாக, அடிக்கடி வழக்குகள் வருகின்றன.இவ்வழக்குகளை தொடர்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பதில் அளிக்க, துறை வாரியாக, வழக்கறிஞர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள், வழக்கறிஞர்கள் நிலையில் கண்காணிக்கப் பட்டாலும், சில வழக்குகள், அடுத்த கட்டத்துக்கு நகர்வதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரும்புவதில்லை.இதனால், வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்வதில், அதிகாரிகள் தரப்பில், உரிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.

இந்நிலையில், அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, அனைத்து துறை செயலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம், சமீபத்தில் நடந்தது. இந்த ஆய்வின் போது, 3,116 வழக்குகள், நிலுவையில் இருப்பது தெரியவந்தது.ஆறு மாதங்களுக்கு முன், 2,056 வழக்குகள் தான் நிலுவையில் இருந்தன. தற்போது, 1,053 வழக்குகள் புதிதாக சேர்ந்துள்ளன.

இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மூன்று மாதங்களில், 513 வழக்குகள் புதிதாக பதிவாகி உள்ளன. இவற்றில், 56 வழக்குகளுக்கு மட்டுமே, சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில், பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நிலுவை வழக்குகளில், உரிய பதில் மனு அளிக்க, சம்பந்தப்பட்ட துறை செயலர்கள், முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, ஆய்வு கூட்டத்தில், தலைமை செயலர் அறிவுறுத்தினார்.

இதேபோல, அரசுக்கு எதிராக, 13 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் நிலவரத்தை ஆராய்ந்து, உரிய மேல்முறையீடு செய்யும்படி, துறை செயலர்களையும், தலைமை செயலர் கேட்டுக் கொண்டார். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
21-அக்-201909:53:11 IST Report Abuse
Pa.Arumugam நீதிமன்றங்கள் தலையிட வரையறுக்க படவேண்டும்..தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எந்த திட்டத்தை செயலாற்ற நினைத்தாலும் அதில் நீதிமன்றம் தலையிட்டால் எப்படி நிர்வாகம் செயல்படும்..அதிலும் நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்ல பல வருடங்களை எடுத்துக்கொள்கின்றன..இதில் நீதியரசர்கள் சொந்த கருத்துவேறு சட்டப்படி எண்ணாதீர்ப்பு சொல்லணுமோ அதைவிடுத்து அருவெறுப்பாக தங்கள் கருத்துக்களை வாந்திஎடுப்பதால் சகிக்கமுடிவதில்லை..எதற்கெல்லாம் முடுவுகட்டவேண்டியது அவசியம் ..
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
21-அக்-201908:05:33 IST Report Abuse
தமிழ் மைந்தன் துறை செயலாளர்கள் தொடர்ந்து தூங்குவதால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமானது..............திமுக ஆட்சிகளில் போல ஊழல் செய்து கொள்ள அனுமதி எடுக்கப்பட்டால் விரைவாக வேலை செய்வார்கள்.....( பல அதிகாரிகள் அமைச்சர்களுக்கு கூட தெரியாமல் கமிஷன் பெறுகிறார்கள்....காரணம் விஞ்ஞா ஊழலின் பயிற்சி அப்படி).....
Rate this:
Share this comment
Cancel
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
21-அக்-201900:42:58 IST Report Abuse
Raj பொதுக்கூட்டத்துக்கு போவதற்கே நேரம் சரியாயிருக்கு, இதுலே வழக்கெல்லாம் யார் பாப்பாங்க ? நியாயமாவது ...வெங்காயமாவது. நீதிமன்றமே பார்த்து எதாவது செய்தால் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X