பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் பட்டாசா? மூன்றாண்டு சிறை

Added : அக் 20, 2019
Advertisement

சென்னை:'ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், சென்னையில், பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. தீவுத்திடலில், பெரிதாக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களிலும், பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது.இதனால், வெளியூர்களில் இருந்து பட்டாசு வாங்க, சென்னை வருபவர்கள், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள், ரயிலில் பட்டாசு எடுத்து செல்லலாம் என்பதால், ரயில் நிலையங்களில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையில், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், மாம்பலம் மற்றும் தாம்பரம் நிலையங்களில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன் தலைமையிலான குழுவினர், பயணியரை கண்காணித்து வருகின்றனர்.'ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்றாண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை பெற நேரிடும்' என, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X