சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

Added : அக் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 கொள்ளையன் முருகனிடம், 'கட்டிங்':லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

சென்னை:திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த முருகனிடம், பல லட்சம் ரூபாய், 'கட்டிங்' வாங்கிய, போலீஸ் அதிகாரிகளிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருச்சி, சத்திரம் பஸ் நிலையம் அருகே, லலிதா ஜூவல்லரி என்ற, பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு அக்டோபர், 2ல், சுவரை துளையிட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 13 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர். கோர்ட்டில் சரண்இச்சம்பவம் தொடர்பாக, போலீசாரால் தேடப்பட்டு வந்த, திருவாரூர் மாவட்டம், சீராத்தோப்பை சேர்ந்த முருகன், 45, கர்நாடக மாநிலம், பெங்களூரிலும், இவரது மைத்துனர் சுரேஷ், 28, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். முருகனை பெங்களூரு போலீசாரும், சுரேஷை திருச்சி போலீசாரும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸ் விசாரணையின் போது, முருகன் அளித்த வாக்குமூலம்:திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 450 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தோம். அந்த நகைகளை விற்று, சுரேஷை கதாநாயகனாக்கி, தெலுங்கில் இரு படங்களை தயாரித்தேன்; ஆனாலும், படத்தை முழுமையாக எடுக்க முடியவில்லை.
வங்கி கொள்ளை
இந்தப் படங்களில் நடிக்க வைக்க, இளம் நடிகை ஒருவரை நாடினோம்; அவரோ, 'பிசி'யாக இருப்பதாக கூறிவிட்டார். அவருக்கு, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை, பரிசாக வழங்கினேன். 'இரவு விருந்து' சாப்பிடும் அளவுக்கு, அந்த நடிகையுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கடந்த, 2018ல், சென்னை அண்ணா நகரில், கூட்டாளிகளுடன் சேர்ந்து, 19க்கும் மேற்பட்ட வீடுகளில், கிலோ கணக்கில் நகைகளை கொள்ளையடித்தேன். இது தொடர்பாக, என் வலது கரமாக செயல்பட்ட, நெல்லையை சேர்ந்த, தினகரன், 28, உள்ளிட்ட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் பணிபுரிந்து வரும், கிருஷ்ணயமான இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார், என்னை நெருங்கினர். அவர்களுக்கு, 30 லட்சம் ரூபாய், 'கட்டிங்' கொடுத்தேன்.
சொகுசு கார்
திருவாரூர் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த ஒருவர், எனக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார். அவருக்கு மாமூல் வழங்கி வந்தேன்; 18 லட்சம் ரூபாய்க்கு, சொகுசு கார் வாங்கி கொடுத்தேன். அவர், அந்தக் காரை, தன் இரண்டாவது மனைவிக்கு பரிசளித்தார்.இவ்வாறு, முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேபோல, சுரேஷும், பல திடுக்கிடும் தகவல்களை, வாக்குமூலமாக அளித்து உள்ளார். இதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்ட, எஸ்.பி.,யாக இருந்தவர் மற்றும் கிருஷ்ணயமான இன்ஸ்பெக்டர், இரு தலைமை காவலர்கள், இளம் நடிகை என, பலரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'முருகனிடம், 'கட்டிங்' வாங்கிய, போலீஸ் அதிகாரிகள் மற்றும் இளம் நடிகை உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விரைவில், 'சம்மன்' அனுப்பப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
26-அக்-201919:49:05 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி ஊழலையும் திருட்டையும் ஒழிக்கும் காவல்துறையின் துணை இன்றி இப்படியெல்லாம் நடக்குமா?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-அக்-201911:58:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni MARAMUKA KOLLAIYARKALAI வீட்டா நேர்முககொள்ளையர்களை போட்டுத்தள்ளவேண்டும் சுட்டுட்டு பொசுக்கிடுங்க அதுதான் பெஸ்ட் இல்லேன்னா ஆவியாவே வந்தும் கொள்ளை அடிப்பானுகளே
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-அக்-201909:12:18 IST Report Abuse
Darmavan அப்படி உண்மை இருந்தால் பணி நீக்கம் செய்து சொத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X