பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை

Added : அக் 20, 2019
Advertisement
 பட்டாசு விற்பனை: தீயணைப்பு துறை எச்சரிக்கை

சென்னை:தீபாவளி பண்டிகைக்கு, நகரங்கள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும், தற்காலிகமாக பட்டாசு கடைகள் புற்றீசலாக முளைப்பது வழக்கம். குறிப்பாக, பெட்டிக் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
இது, சீசன் கால கடை தான் என்றாலும், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்வது மிக முக்கியம்.அதனால், பட்டாசு கடைகள் அமைக்க, தீயணைப்புத் துறை, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரித்து உள்ளது.விதிமுறைகள் என்ன?
வெடிபொருள் சட்டப்படி, பட்டாசு கடை வைக்கும் இடம், கல் மற்றும் கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இரு புறத்திலும், கட்டாயம் வழி இருக்க வேண்டும். கட்டடத்தில், மின் விளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்; அலங்கார மின் விளக்குகளை தொங்க விடக்கூடாது.
உரிமம் கேட்பவர்கள், தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையிடமிருந்து, தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டாசு கடைகளில், வேறு பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது.
தரைத்தளத்தில் மட்டுமே, பட்டாசுகளை வைத்திருக்க வேண்டும். படிக்கட்டுகள், 'லிப்ட்' அருகே பட்டாசுகளை வைத்திருக்கக் கூடாது. அடுக்குமாடி குடியிருப்பு, திருமண மண்டபம், அரங்குகள் ஆகியவற்றின் கீழ், பட்டாசு கடைகள் வைக்கக் கூடாது.
பட்டாசு கடைகளுக்கு இடையே, 10 அடி இடைவெளி இருக்க வேண்டும். உதிரி பட்டாசுகளை, கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. 'இங்கு புகை பிடிக்கக் கூடாது' என்பது உள்ளிட்ட, எச்சரிக்கை விளம்பர பலகைகளை வைக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு, பட்டாசு மற்றும் துப்பாக்கி வெடித்து காட்டக்கூடாது. உரிமம் பெற்ற கட்டடத்தை தவிர, வேறு இடங்களில், பட்டாசு இருப்பு வைத்திருக்கக் கூடாது.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது. இதை மீறும் பட்டாசு விற்பனையாளர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீயணைப்பு துறை வாகனம் வரும் அளவுக்கு வழி இருக்க வேண்டும். இரு தீயணைப்பு கருவிகள், இரு வாளிகளில் தண்ணீர், மணல் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.
கடை உரிமத்தை, தணிக்கை அலுவலர்களின் பார்வைக்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இருப்பு, தணிக்கை பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.இது போன்ற, 30 விதிமுறைகளை பின்பற்றினால் தான், பட்டாசு கடைகள் அமைக்க, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படுகிறது.அனுமதி பெறும் கடைகள், விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், உரிமம் ரத்து செய்வதோடு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தீயணைப்பு துறை எச்சரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X