மகா.,. ஹரியானாவில் பா.ஜ., அரசுகள்... நீடிக்குமா?

Updated : அக் 21, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (23)
Advertisement

மும்பை:மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்க உள்ளது. இந்தத் தேர்தல், இரு மாநிலங்களிலும், பா.ஜ., அரசு நீடிக்குமா என்பதுடன், அம்மாநில முதல்வர்களின் தலைவிதியையும் நிர்ணயிக்க உள்ளது. இத்துடன், தமிழகத்தின், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகள் உட்பட, 18 மாநிலங்களில் காலியாக உள்ள, 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கும், இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.லோக்சபாவுக்கு இந்தாண்டு, ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடந்தது. அதில், மிகப் பெரிய வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் பா.ஜ., அரசு அமைந்தது.


Maha polls preparations

Maha polls preparations


எதிர்பார்ப்புமஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபைகளுக்கு, இன்று ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலுக்குப் பின் நடைபெறும் மாநில சட்டசபை பொதுத் தேர்தல் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஹரியானாவில் பா.ஜ., அரசும், மஹாராஷ்டிராவில், பா.ஜ., கூட்டணி அரசும் அமைந்துள்ளன. அதனால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ., தீவிரமாக உள்ளது. பிரதமர் மோடி, இரு மாநிலங்களிலும், 25 பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.

கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், மனோகர் லால் கட்டார் என, ஆளும் தரப்பு மிகுந்த உற்சாகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்டது.


Haryana polls preparations

Haryana polls preparations


பதவி விலகிய ராகுல்அதே நேரத்தில், லோக்சபா தேர்தல் தோல்வியால், காங்., துவண்டு போயுள்ளது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியில் இருந்து, ராகுல் விலகினார். இதனால், அவருடைய தாய் சோனியா, இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ராகுல், ஏழு பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார். சோனியா பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவால், ரத்து செய்தார். லோக்சபா தேர்தலின் போது, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட, சோனியாவின் மகளும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா, தற்போது நடைபெறும் தேர்தலில் பெரிய அளவில் காணப்படவில்லை.


Maharashtra Assembly polls

Maharashtra Assembly polls

இடை தேர்தல்இந்த இரு மாநில சட்டசபை தேர்தலைத் தவிர, 17 மாநிலங்களில், காலியாக உள்ள, 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மஹாராஷ்டிரா மற்றும் பீஹாரில் காலியாக உள்ள இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், இன்று நடக்க உள்ளது. உத்தர பிரதேசத்தில், 11; குஜராத்தில், ஆறு; கேரளா மற்றும் பீஹாரில், தலா, ஐந்து; பஞ்சாப் மற்றும் அசாமில், தலா, நான்கு; சிக்கிமில், மூன்று; தமிழகம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் தலா, இரண்டு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.

அருணாசல பிரதேசம், ம.பி., ஒடிசா, சத்தீஸ்கர், புதுச்சேரி, மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் தலா, ஒரு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. மஹாராஷ்டிராவில் உள்ள சதாரா லோக்சபா தொகுதி மற்றும் பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் லோக்சபா தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது.இந்தத் தேர்தல் முடிவுகள், வரும், 24ல் வெளியாக உள்ளன.* மஹாராஷ்டிராமுதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிரா வில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில், பா.ஜ., 150 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனா, 124லும் போட்டியிடுகின்றன. அதேபோல் காங்., 147 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான, சரத் பவாரின் தேசியவாத காங்., 121லும் போட்டியிடுகின்றன.

ராஜ் தாக்கரேயின், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, மாயாவதியின் பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம், 1,400 சுயேச்சைகளும் போட்டியிடு கின்றனர். மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள, 3,237 வேட்பாளர்களில், 235 பேர் பெண்கள்.


* ஹரியானாமுதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள ஹரியானாவில், 90 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று ஓட்டுப் பதிவு நடக்கிறது. இங்கு, பல முனை போட்டி உள்ளது. பா.ஜ., - காங்., - இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக் ஜனதா கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில், 105 பெண்கள் உட்பட, 1,169 பேர் போட்டியிடுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
21-அக்-201916:25:53 IST Report Abuse
J.Isaac சந்தேகமா?
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
21-அக்-201913:02:16 IST Report Abuse
தங்கை ராஜா ஒரேயொரு உறுப்பினரை வைத்துக் கொண்டு சிக்கிமில் ஆளும் கட்சியாக வில்லையா
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
21-அக்-201910:59:58 IST Report Abuse
konanki சுந்தரம் தோல்வி ஜூரத்தில புலம்புகிறார். பாவம்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-அக்-201911:31:03 IST Report Abuse
சுந்தரம் எனக்கு வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. வேறு ஒரு பத்திரிகையில் வந்த செய்தி எடுத்து சொல்லி இருந்தேன். அதற்கு கட்சி கொள்கைப்படி நண்பர் தியாகு ஒருமையில் என்னை வசை பாடி உள்ளார். நீங்களாவது மற்றவர்கள் கருத்துக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து கருத்து எழுதியதில் மகிழ்ச்சிதான்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-அக்-201911:34:02 IST Report Abuse
சுந்தரம் முதலில் நான் எழுதி உள்ள இரண்டு கருத்துக்களையும் படித்துவிட்டு உங்கள் கருத்தை பதியலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X