நியூயார்க் டூ சிட்னி: 19 மணி நேரம் விமானம் பறந்து புதிய சாதனை

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
சிட்னி:அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 'குவாண்டாஸ்' நிறுவனம், நீண்ட துாரம் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய விமானத்தால், தொடர்ச்சியாக, வானில், 20 மணிநேரம் வரை

சிட்னி:அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் இடை நிற்காமல் விமானம் பறந்து, புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.latest tamil newsஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 'குவாண்டாஸ்' நிறுவனம், நீண்ட துாரம் பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை அறிமுகம் செய்துள்ளது.குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய விமானத்தால், தொடர்ச்சியாக, வானில், 20 மணிநேரம் வரை பறக்க முடியும்.அதற்கேற்ற சோதனைகள் நடத்திய அந்நிறுவனம், கடந்த வெள்ளியன்று, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, இந்த விமானத்தின் முதல் சேவையை துவக்கியது.


latest tamil newsஅதன்படி, அமெரிக்காவின். நியூயார்க் நகரிலிருந்து, கடந்த, 18ம் தேதி இரவு, 49 பேருடன் புறப்பட்ட, குவாண்டாசின், 'போயிங், 787-9' ரக விமானத்தில், எங்கும் நிற்காமல் பயணிக்கும் வகையில், போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. விமானம் புறப்பட்டவுடன், பயணியர் அனைவரும் தங்களின் கைக்கடிகாரத்தின் நேரத்தை, சிட்னி நேரத்துக்கு மாற்றி வைத்தனர்.பயணியர், விமானிகளின் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளையின் அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

வழக்கமாக, இரவு நேரத்தில், விமானம் புறப்பட்டவுடன், உணவு அளிக்கப்பட்டு பயணியர் துாங்குவதற்கு அறிவுறுத்தப்படுவர்.ஆனால், இந்த விமானத்தில், மதிய உணவு அளித்து, ஆறு மணி நேரம் விழித்திருக்கச் செய்து, அதன்பின் பயணியருக்கு இரவு உணவு அளித்து, துாங்க அனுமதிக்கப்பட்டனர்.அதாவது, கிழக்கு ஆஸ்திரேலியாவில் இரவு வரும் வரை, அனைவரையும் விழித்திருக்க வைத்து, உணவு வழங்கப்பட்டது. ஆறு மணி நேரத்துக்குப் பின், அவர்களுக்கு, கார்போஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை விளக்குகளைப் பார்க்காமல் துாங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

விமானத்தை இயக்குவதற்கு, வழக்கமாக இரு விமானிகள் இருக்கும் நிலையில், இந்த விமானத்தை நான்கு விமானிகள், மாறி மாறி இயக்கினர். இந்நிலையில், 19 மணி நேரத்துக்கும் அதிகமாக வானில் பறந்து, நேற்று காலை, சிட்னியில் விமானம் தரையிறங்கியது.

குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி,ஆலன் ஜோய்ஸ் கூறுகையில், ''எங்கும் நிற்காமல், 19 மணிநேரத்துக்கும் மேலாக, விமானம் பறந்துள்ளது வரலாற்று நிகழ்வு. ''பயணியரையும், விமானிகளையும், எவ்வாறு மேலாண்மை செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்,'' என்றார்.

குவாண்டாஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய பல்கலைகளுடன் கூட்டு வைத்து, 19 மணிநேர இடைவிடாது மேற்கொள்ளும் பயணம், மனிதர்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் ஆய்வு செய்தது. பயணியருக்கு வழங்கும் உணவு, குடிப்பதற்குக் கொடுக்கும் பானம், வெளிச்சம் ஆகியவை சரியாக இருந்தால், உடல்நிலையில் பாதிப்பு இருக்காது என்பது, இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201905:36:39 IST Report Abuse
 rajan எல்லாம் தண்ணி அடிச்சுட்டு ஒரே alcohol வாடையுடன் அமர்ந்திருப்பார்கள். ஒருமுறை இன்டர்நேஷனல் விமானத்தில் பயணிக்க நேர்ந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரே மது வாடை தான். இதுவும் ஒரு கருமம் எப்படா வெளியே வருவோம் என்று ஆகிவிட்டது.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-அக்-201907:08:21 IST Report Abuse
Sanny ஏதாவது சரக்கு வண்டியில் மாறி ஏறியிருப்பாய்,...
Rate this:
crap - chennai,இந்தியா
21-அக்-201907:09:15 IST Report Abuse
crapஎந்த விமானத்தில் பயணிக்கிறோம் என்பது முக்கியம் பாஸ். எகானமி / பட்ஜெட் வகை கம்பெனிகளில் இந்தியாவிலிருந்து மூன்று அல்லது நான்கு மணி நேர பயணம் போகும் இன்டர்நேஷனல் விமானங்கள் எல்லாம் சென்னை மாநகர பேருந்துகளை விட மோசம். அதற்கு காரணம் அவர்கள் அல்ல. சுய ஒழுக்கம் இல்லாத நமது மக்கள். நல்ல விமானங்களில் பறந்து பாருங்கள். நன்றாகவே இருக்கும்....
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
20-அக்-201922:02:21 IST Report Abuse
blocked user அதிக நேரம் பயணம் செய்யவேண்டும் economy class இருக்கை சிறிது அகலமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் பக்கத்தில் சொரியன் எவனாவது வந்தால் மண்டை காய்ந்துவிடும்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-அக்-201905:21:46 IST Report Abuse
Sanny இவ்வளவு ஏட்பாடுகள் செய்தவர்கள் அதையுமா செய்ய விடாமல் விட்டுவிடுவார்களா? அதுமட்டுமல்ல பயணிகள் நடை பயிச்சி எடுக்கும் வகையில் ஆசனங்கள் அமைத்து இடவசதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X