பொது செய்தி

தமிழ்நாடு

ஆலாங்கடவில் டெங்கு தடுப்பு: 'குட்டி கமாண்டோஸ்' முனைப்பு

Updated : அக் 21, 2019 | Added : அக் 20, 2019
Advertisement
 ஆலாங்கடவில் டெங்கு தடுப்பு: 'குட்டி கமாண்டோஸ்' முனைப்பு

ஆனைமலை:ஆனைமலை அடுத்த ஆலாங்கடவு கிராமத்தில், அரசு துவக்கப்பள்ளியை சேர்ந்த 'குட்டி கமாண்டோஸ்' படையினர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
ஆலாங்கடவு அரசு துவக்கப்பள்ளியில், 25 மாணவர்கள் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக மாணவர்கள் சார்பில், 'குட்டி கமாண்டோஸ்' படை நடத்தப்படுகிறது. இவர்கள் பள்ளி, கிராமத்தை துாய்மை படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது, சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என, பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர் சிவராம் ஆனந்த் தலைமையில், 'குட்டி கமாண்டோஸ்' மற்றும் ஆலாங்கடவு இளைஞர் குழுவினர் இணைந்து, தண்டோரா அடித்துக்கொண்டு, வீதிகளில் பேரணி நடத்தி, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவர்கள், இளைஞர்கள், வீடுகளில் ஆய்வு செய்து, டயர்கள், ஆட்டுக்கல், தேங்காய் தொட்டிகளில் தேங்கியிருந்த மழைநீரை வடித்தனர்.
சுகாதாரத்தை காப்பதில் அனைவரின் பங்களிப்பும் தேவை என்பதை, மாணவர்கள் உணர்த்தினர்.தொடர்ந்து ஈடுபடுவோம்!ஆசிரியர்கள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், மக்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையினர் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.நாங்களும் தொடர்ந்து, கிராமத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம். சுகாதாரமான சூழலை உருவாக்குது அனைவரின் அடிப்படை கடமை. இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X