பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் பட்டத்தால் பொறுப்பு அதிகரிப்பு: முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு

Updated : அக் 21, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (56+ 24)
Advertisement
 டாக்டர், பட்டத்தால், பொறுப்பு, அதிகரிப்பு, முதல்வர் ,இ.பி.எஸ்., பேச்சு

சென்னை:''கவுரவ டாக்டர் பட்டம் பெற்றதால், எனக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளன,'' என, இ.பி.எஸ்., பேசினார்.
சென்னையில் உள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், 28வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு, கவுரவ டாக்டர் பட்டத்தை, நிறுவன வேந்தர், ஏ.சி.சண்முகம், நிறுவன தலைவர், ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் வழங்கினர்.


டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

ரூ.6,813 கோடி


இதையடுத்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் செயலர் சதீஷ் ரெட்டி, கை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ சபாபதி, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகை ஷோபனா ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி, இ.பி.எஸ்., பேசியதாவது:

தமிழக அரசு, அதிக நிதி ஒதுக்கி, கல்வித் திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், இதுவரை, 6,813 கோடி ரூபாய் செலவில், மாணவர்களுக்கு, 'லேப் டாப்' வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில், உயர்கல்வி சேர்க்கையில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில், ராமேஸ்வரத்தில், கடல் சார் கல்லுாரி துவங்கப்பட உள்ளது. கல்வித்திறன் மேம்பாட்டின் வாயிலாக, மனித வளத்தை மேம்படுத்த வேண்டும்.


பாடத்திட்டம்


இங்கு பட்டம் பெறும் நீங்கள், நல்ல பொறுப்புகளை ஏற்கும் தருணம் இது. ஏட்டு கல்வியுடன், வாழ்க்கை கல்வியை பெறுவது மிகவும் அவசியம். கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதன் வாயிலாக, எனக்கும் பொறுப்புகள் அதிகரித்துள்ளன.

கல்வி என்பது எழுத்தறிவை மட்டும் கொடுக்காமல், மனிதனை சிந்திக்க வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இதையறிந்த அரசு, பிளஸ் 2 வகுப்பு வரை, புதிய பாடத் திட்டங்களை வெளியிட்டு உள்ளது.இங்கு படிப்பவர்கள், வேலை தேடுபவர்களாக இல்லாமல், மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவர்களாக, உருவாக்கப்படுகின்றனர். அதற்காக, இந்த நிறுவனத்தை பாராட்டுகிறேன்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.


முதல்வர் சொன்ன குட்டிக்கதை
விழாவில், முதல்வர் கூறிய குட்டி கதை: ஊசி, தன் கூர்மையான முனையை எண்ணி, கர்வப்பட்டது; நுால் நுழையும் காதுள்ள மறுமுனையை, ஏளனமாக கருதியது. ஆனால், அந்த காது உடைந்ததால், 'இந்த ஊசி, இனி நமக்கு உதவாது' என, ஊசியை பயன்படுத்தியவர், குப்பையில் வீசினார். அப்போது தான், ஊசியின் கூர் முனை தவறை உணர்ந்தது.

'கூர்மையாக இல்லாத காது முனையால்தான், கூர்மையாக உள்ள தனக்கு மரியாதை' என, உணர்ந்தது. மாணவர்களாகிய நீங்கள், கல்வி எனும் கூர்மையான, ஒரு முனை மட்டும் போதும் என, இருக்கக்கூடாது. ஒழுக்கம், நன்னடத்தை, சமூக அக்கறை, நாட்டின் அமைதி, வளர்ச்சி போன்ற பொதுநலன் சார்ந்த அறிவிலும் தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (56+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
21-அக்-201922:15:00 IST Report Abuse
oce காதறுந்த ஊசியும் கடை வழிக்கு வாராது காண்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
21-அக்-201922:13:12 IST Report Abuse
oce புரட்சி தலைவர் பொன்மன செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தனக்களித்த டாக்டர் பட்டத்தை புறக்கணித்தார். அவர் தான் தலை சிறந்த அரசியல் வாதி. மற்றவரெல்லாம் அதில் மீதி.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-அக்-201920:57:44 IST Report Abuse
Natarajan Ramanathan இவர் எப்போது NEET EXAM பாஸ் செய்தார்? இந்த டாக்டர் பட்டத்தை 2016 லேயே கொடுத்திருந்தால் அம்மாவை காப்பாற்றி இருப்பாரே இப்பத்தான் LKGல சேர்ந்த மாதிரி இருக்கு. பயபுள்ள அதுக்குள்ள டாக்டராகி விட்டாரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X