தமிழகத்தில் பரவலாக மழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை

Updated : அக் 20, 2019 | Added : அக் 20, 2019
Share

சென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.



latest tamil news


மேலும் அடுத்து வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் பரவலாக மழையும், வடதமிழகத்தில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இதனையடுத்து ராமநாதபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.


latest tamil news



ராமநாதபுரம் : ஆர்.எஸ் மங்கலம், தேவிப்பட்டினம், சத்திரக்குடி திருப்பாலைக்குடி, பேராவூர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டம்:
உளுந்தூர்பேட்டை, திருநாலூர், தலமருதூர், ஆசனூர்,எலவநாசூர் கோட்டை, சேந்தநாடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

வேலூர்: குடியாத்தம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மழை பெய்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X