பொது செய்தி

இந்தியா

பிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு

Added : அக் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு

புதுடில்லி,:மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, பாலிவுட்டின் பிரபலங்கள், பிரதமர் மோடியை சந்தித்தனர்.
தேசப்பிதா மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், நாடு முழுவதும் கோலாகலமாக நடக்கின்றன. பிரபலங்கள் சந்திப்புஇந்நிலையில், பிறந்த நாள் கொண்டாட்டங்களை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பாலிவுட் பிரபலங்கள் பலர், நேற்று முன்தினம் இரவு, பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள், ஷாரூக் கான், அமீர் கான், சோனம் கபூர், கங்கணா ரணாவத், இயக்குனர்கள், ராஜ்குமார் ஹிராணி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி அய்யர் திவாரி, நிதேஷ் திவாரி, தயாரிப்பாளர்கள், ஏக்தா கபூர், போனி கபூர் உள்ளிட்ட பலர், இதில் பங்கேற்றனர். காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எப்படி நடத்துவது என்பது குறித்து, பாலிவுட் பிரபலங்கள், பிரதமருடன் கலந்துரையாடினர்.இந்த சந்திப்பின்போது, காந்தியின் பெருமையை பறைசாற்றும் நான்கு வீடியோக்களையும், பிரதமர் வெளியிட்டார்.
நடவடிக்கை
அப்போது, காந்தியின் புகழை பரப்பும் வகையில், சர்வதேச அளவிலான பொழுதுபோக்கு மாநாடு ஒன்றை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.சந்திப்பு முடிந்ததும், பிரதமர் வெளியிட்ட அறிக்கை:சுதந்திர போராட்டம், நாடு சுதந்திரம் அடைந்த பின் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆகியவை குறித்த விஷயங்களை மக்களுக்கு விளக்கும் நடவடிக்கைகளில், திரைத்துறையினர் ஈடுபட வேண்டும். மஹாத்மா காந்தியின் புகழை பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு, அரசு தரப்பில் போதிய ஒத்துழைப்பு அளிக்க தயார். சமீபத்தில், சீன அதிபரை சந்தித்தபோது, இந்திய சினிமா துறை குறித்து பேசினார். டங்கல் படத்தின் கதையம்சம் குறித்து பாராட்டு தெரிவித்தார்.அந்த படம், சீனர்களால், பெரிதும் ரசிக்கப்பட்டதாக, அவர் கூறினார். ராமாயணத்தின் பெருமைகள் குறித்தும் பேசினார். சீன அதிபருடனான, என் சந்திப்புக்கு பின், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தமிழகத்திலிருந்து செய்திகள் வருகின்றன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்ததாக, பாலிவுட் பிரபலங்கள், சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். நன்றிஅமீர் கான் கூறுகையில், 'பிரதமருடனான சந்திப்பு, மகிழ்ச்சியானதாக இருந்தது. அவரது பேச்சு, எங்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஊட்டியது. மஹாத்மா காந்தியை பற்றிய விஷயங்களை அழகாக எடுத்துக் கூறினார்' என, தெரிவித்துள்ளார். ஷாரூக்கான் கூறுகையில், 'இதுபோன்ற அற்புதமான கலந்துரையாடலுக்காக, பாலிவுட் பிரபலங்களை அழைத்ததற்காக, பிரதமருக்கு நன்றி. காந்தியின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை, திரைத்துறையினருக்கு உள்ளது' என, தெரிவித்துள்ளார்.
துருக்கி பயணம் ரத்து
பிரதமர் மோடி, மத்திய கிழக்கு நாடான துருக்கிக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன், ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை விமர்சித்து, சமீபத்தில், ஐ.நா., சபையில் பேசினார். இதையடுத்து, பிரதமர் மோடியின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-அக்-201910:12:16 IST Report Abuse
vbs manian ஷாருக் கான் அமீர் கான் மோடியை சந்தித்தது நம்பமுடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X