பொது செய்தி

இந்தியா

எல்லையில் பாக்., அத்துமீறலுக்கு இந்திய ராணுவம்...பதிலடி:பாக்., வீரர்கள் 5 பேர் பலி; பயங்கரவாதிகளும் காலி

Updated : அக் 22, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (9)
Advertisement
பாக்., அத்துமீறல், ராணுவம், இந்தியா, பதிலடி, பலி, பயங்கரவாதி

புதுடில்லி:எல்லை பகுதியில், பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை குறிவைத்து, இந்திய ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதலில், பாக்., வீரர்கள் ஐந்து பேரும், பயங்கரவாதிகள், 25 பேரும் கொல்லப்பட்டனர்; நான்கு பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை, மத்திய அரசு, சமீபத்தில் ரத்து செய்தது. இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க, அண்டை நாடான பாகிஸ்தான், தொடர்ந்து முயற்சித்து வந்தது. ஆனால், அதன் முயற்சிகள் தோல்வி அடைந்தன.


இந்தியாவில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய காஷ்மீர் எல்லையில் உள்ள நமது ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானின் வாடிக்கை. அந்த வகையில் சனி நள்ளிரவில் காஷ்மீரின் டங்தார் Tanthar செக்டாரில் இந்திய நிலைகளை பாகிஸ்தான் ராணுவம் திடீரென அத்துமீறி தாக்கியது. இதில், 2 வீரர்கள் பலியாயினர். எல்லையை ஒட்டிய கிராமங்களில் பாகிஸ்தான் குண்டுகளை போட்டதில் கிராமவாசி ஒருவரும் இறந்தார்.

சதி திட்டம்இதையடுத்து, காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைத்து, தாக்குதல்களை நடத்த வைக்கும் சதித்திட்டத்தில், பாக்., அரசு ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக, காஷ்மீரில், எல்லை பகுதியில், பாக்., ராணுவத்தினர் தொடர்ந்து, அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் மாலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், தாங்தார் பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து, பாக்., ராணுவத்தினர், அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், நம் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்; அப்பாவி பொதுமக்களில் ஒருவரும், இதில் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். வீடுகளும் பலத்த சேதமடைந்தன.

இதற்கு பதிலடி தரும் வகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை குறிவைத்து, நம் வீரர்கள், நேற்று காலை முதல், அதிரடியாக பீரங்கி தாக்குதல் நடத்தினர். நம் ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், பாக்., வீரர்கள் பின்வாங்கினர். இந்த தாக்குதலில், பாக்., வீரர்கள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள், 25 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


முற்றிலும் அழிப்புஇந்திய ராணுவத்தின் தாக்குதலில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரீன் நீளம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த, நான்கு பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதற்கிடையே, தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள் ஒன்பது பேர் உயிரிழந்ததாக, பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம், இதை மறுத்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் நடத்திய இந்த தாக்குதல் காரணமாக, எல்லை பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

நம் எல்லையில், கூடுதல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ராணுவ தளபதி பிபின் ராவத், எல்லையில் நடந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். பயங்கரவாதிகளின், 3 - 4 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பாக்., தரப்பில், 6 - 10 வீரர்கள் கொல்லப் பட்டு உள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.


ராஜ்நாத் ஆலோசனைஎல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி பிபின் ராவத்துடன், நேற்று ஆலோசனை நடத்தினார். எல்லையில் நடந்த தாக்குதல் குறித்த விபரங்களை கேட்டறிந்ததுடன், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார். எல்லையில் நடக்கும் நிகழ்வுகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், கூர்ந்து கவனித்து வருவதாகவும், தேவைப்பட்டால், காஷ்மீருக்கு சென்று நிலைமையை கண்காணிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sachin - madurai,இந்தியா
21-அக்-201913:29:08 IST Report Abuse
sachin தேர்தல் வந்தால் போர் வரும்...
Rate this:
Share this comment
Srini - MUMBAI,இந்தியா
21-அக்-201916:28:09 IST Report Abuse
Sriniதேர்தல் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, எதிரி நம்மை தாக்கும் பொழுது கை கட்டிக்கொண்டு தேர்தல் முடியும் வரை சும்மா இருக்க சொல்கிறீர்களா,...
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
21-அக்-201918:59:12 IST Report Abuse
Ramakrishnan Natesanஇதற்க்கு புல்வாமாவில் இறந்த போர்வீரர்கள் ஆவி தான் பதில் சொல்லணும் பாவம்...
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
21-அக்-201911:28:06 IST Report Abuse
மூல பத்திரம் போட்டு தள்ளுங்கள், உள்ளூர் கல் எறியும் கும்பலையும் இந்த சந்தடி சாக்கில் போட்டு தள்ளவும். தீவிரவாதிகளுடன் இணைத்து பைலை மூடவும்
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
21-அக்-201911:26:26 IST Report Abuse
Sundar Why are you waiting for another preemptive 'surgical Strike' to eliminate the terrorists camp.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X