'இந்தியா அமெரிக்கா பேச்சு முழு வீச்சில் உள்ளது'

Updated : அக் 22, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (6)
Advertisement
இந்தியா,  அமெரிக்கா,முழுவீச்சு,  பேச்சு, ஒப்பந்தம், டிரம்ப்

வாஷிங்டன்: 'இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, மிகவும் வேகமாக, முழு வீச்சில் நடந்து வருகிறது' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் சந்தித்து ஆலோசனை நடத்தும் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் வாஷிங்டனில் நடக்கிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் முசினை நேற்று சந்தித்து பேசினார்.பின், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு, முழு வீச்சில் நடக்கிறது.

இது தொடர்பாக நம் வர்த்தக துறை அமைச்சர், அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேசி வருகிறார். இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, என்னுடைய தரப்பில் இருந்து கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.இரு தரப்பும், இந்த விவகாரத்தில் தீவிரமாக உள்ளன. அதனால், மிக விரைவில் ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க நிதி அமைச்சர் முசின், அடுத்த மாத துவக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-201920:27:11 IST Report Abuse
Tamilan இவர் இந்தியாவின் பொருளாதார அமைச்சரா
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
21-அக்-201910:43:03 IST Report Abuse
மணி 0....
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-அக்-201910:11:55 IST Report Abuse
Sampath Kumar நீங்க வீசுற வீச்சில் ட்ரம்ப் பயந்து போய் இந்தியா வளரும் நாடுதான் என்று ஒத்துக்கொள்ள வைங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X