பொது செய்தி

இந்தியா

லோக்சபா தேர்தலில் ஓட்டளித்த என்.ஆர்.ஐ.,

Updated : அக் 22, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களில், 25 ஆயிரம் பேர் தாயகம் வந்து ஓட்டளித்துள்ளனர். லோக்சபாவுக்கு இந்தாண்டு, ஏப்., மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடந்தது. இதில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அளித்துள்ள ஓட்டுகள் குறித்து, தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு
 லோக்சபா, தேர்தலில், ஓட்டளித்த, என்.ஆர்.ஐ.,

புதுடில்லி:இந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களில், 25 ஆயிரம் பேர் தாயகம் வந்து ஓட்டளித்துள்ளனர்.

லோக்சபாவுக்கு இந்தாண்டு, ஏப்., மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடந்தது. இதில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அளித்துள்ள ஓட்டுகள் குறித்து, தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இங்கு நடைபெறும் தேர்தலில் ஓட்டுப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, லோக்சபா தேர்தலில், ஓட்டுப் பதிவு செய்வதற்கு, 99 ஆயிரத்து, 807 பேர் பதிவு செய்திருந்தனர். இதில், 7,943 பேர் பெண்கள்; 14 பேர் திருநங்கையர்.

ஆனால், இதில், 25 ஆயிரத்து, 606 பேர் மட்டுமே, இந்தியாவுக்கு வந்து தங்களுடைய சொந்த ஊர்களில் ஓட்டளித்தனர். இதில், 1,148 பேர் பெண்கள்.தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, டில்லியில், 336 பேரும்; புதுச்சேரியில், 272 பேரும்; மேற்கு வங்கத்தில், 34 பேரும் பதிவு செய்திருந்தனர். ஆனால், இவர்களில் ஒருவர் கூட ஓட்டளிக்கவில்லை.நாட்டிலேயே மிகவும் அதிகமாக, கேரளாவில், 85 ஆயிரத்து, 161 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அதில், 25 ஆயிரத்து, 91 பேர் ஓட்டளித்தனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-அக்-201905:46:11 IST Report Abuse
D.Ambujavalli ஹூம், உள்ளூர்க்காரர்களையே, சற்றுப் படித்தவர், சொந்த புத்தியுடன் ஓட்டுப்போடுபவர் என்று ஊகித்தாலே பட்டியலிலிருந்து நீக்கி விடுவார்கள் என் ஆர் ஐ ஓட்டுப்போடும் வரை விட்டு வைத்திருப்பார்களா? அவர்கள் ஓட்டை எப்போதோ போட்டு முடித்திருப்பார்களே இன்னொரு ‘சர்க்கார்’ போராட்டத்துக்கு எந்த என் ஆர் ஐ அவ்வூரிலுள்ள வேலை வெட்டியை விட்டுவிட்டு தயாராக இருப்பார்?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
21-அக்-201904:25:50 IST Report Abuse
blocked user வெளிநாட்டில் வசிப்போருக்கு அந்தந்த தூதரகத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் சென்று வாக்களிக்கும் வசதி செய்து கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வாழுவோரின் பிரதிநித்துவம் பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இருக்கவேண்டும். இல்லை என்றால் ஏராளமாக குடும்பங்களுக்கு பணம் அந்நியச்செலாவணியாக வருவதில் அர்த்தம் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X