பொது செய்தி

தமிழ்நாடு

ஐம்பொன் பட்டன் சட்டை சேலத்தில் அறிமுகம்

Updated : அக் 21, 2019 | Added : அக் 20, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
 ஐம்பொன் ,பட்டன் ,சட்டை,சேலம்,அறிமுகம்

சேலம்:சேலத்தில், ஐம்பொன், நவரத்தின, ராசிக் கல் பட்டன் அடங்கிய ஆபரண சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் தினகரன், 58.நீண்ட காலமாக, ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய ரக சட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:வெள்ளை வேட்டி, சட்டை பிரியர்களுக்கு, ஐம்பொன், நவரத்தின கற்கள், ராசி கற்களை பட்டனாக கொண்ட ஆபரண சட்டைகளை, இந்தியாவிலேயே முதல் முறையாக, சேலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.

செம்பு, துத்தநாகம், வெள்ளீயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐம்பொன் முலாம் பூசிய பட்டன்கள் பொருத்திய வெள்ளை சட்டைகள், விற்பனைக்கு கிடைக்கும்.அரை கை சட்டை, 1,200 முதல், 2,000 ரூபாய், முழுக்கை சட்டை, 1,400 முதல், 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஐம்பொன் பட்டன் தேவைப்படாத போது, எடுத்து வைத்து, சாதாரண பிளாஸ்டிக் பட்டன்களை பொருத்தி கொள்ளும்படி, சட்டையில் பட்டன் காஜா வடிவமைக்கப்பட்டுள்ளது. துவைக்கும் போது, 'அயர்ன்' பண்ணும்போது, பட்டன்களை தனியே கழற்றி வைத்து விடலாம்.சட்டையில், ஹிந்து கடவுள் படங்கள், கிறிஸ்துவ படங்களை பொருத்தி கொடுக்கிறோம். வர்த்தக லோகோ, டிசைன், பெயர்களை தேவைக்கேற்ப, ஐம்பொன், நவரத்தின, ராசி கற்களில் கூட பொருத்தி கொடுக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
21-அக்-201911:28:26 IST Report Abuse
சுந்தரம் ஐம்பொன் என்பது, தங்கம், வெள்ளி பித்தளை, தாமிரம் ஈயம் ஆகியனவற்றின் சேர்க்கை ஆகும். துத்த நாகம் கிடையாது. (துத்த நாகம் விஷத்தன்மை கொண்டது என்கிறார்கள்)
Rate this:
Cancel
21-அக்-201911:08:58 IST Report Abuse
ருத்ரா தங்கம் மதிப்பை தரும் உண்மை தான் ஜூவல்லரி முருகன் மாதிரி கும்பலில் மாட்டாமல் இருக்கணும். உயிரின் மதிப்பு அதைவிட அதிகம்.
Rate this:
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
21-அக்-201910:32:29 IST Report Abuse
Mano இவரை அணுக ஏதேனும் மொபைல் நம்பர் or இ-மெயில் விலாசம் இருக்கிறதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X