தமிழ்நாடு

மக்கள் 'வெள்ளம்!' திருப்பூர் கடைவீதிகள் களைகட்டின

Updated : அக் 21, 2019 | Added : அக் 20, 2019
Advertisement
 மக்கள் 'வெள்ளம்!' திருப்பூர் கடைவீதிகள் களைகட்டின

திருப்பூர்:விடுமுறை தினமான நேற்று, திருப்பூரில், தீபாவளி வர்த்தகம் களைகட்டியது.தீபாவளிக்கு, ஆறு நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் உள்ள, 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களில் 'போனஸ்' பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில், பொதுமக்கள், மும்முரம் காட்டி வருகின்றனர்.
பிரதான ரோடுகளான, புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காதர்பேட்டை, பி.என்., ரோடு, பல்லடம், காங்கயம் ரோடுகளில் உள்ள ஜவுளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில், ஞாயிறு தினமான நேற்று பொதுமக்கள் குவிந்தனர். தற்காலிக துணி, பலகார கடைகள், நடைபாதை கடைகள் அதிகளவில் முளைத்துள்ளன.
மக்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில், குமரன் ரோட்டில், இருபுறங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டூவீலர்களை, எம்.ஜி.ஆர்., சிலை அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுமார்க்கெட் வழியாக வெளியேறி வந்த பஸ்கள், தற்போது சர்வீஸ் ரோடு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த ரோடு, முற்றிலுமாக மக்கள் நடந்து செல்வதற்காக, ஒதுக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி, குமார் நகர் மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் பின்புறம் தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.போலீஸ் துணை கமிஷனர் உமாவிடம் கேட்ட போது, 'பிரதான ரோட்டில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதிகம் மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. நுாறு 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட உள்ளது. 'பிக்பாக்கெட்', நகை பறிப்பு குற்றவாளிகளைக் கண்டறியும் வகையில், மக்கள் கூடும் இடம், பஸ்களில், போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பழைய குற்றவாளிகளையும் கண்காணித்து வருகின்றனர்.
24ம் தேதி முதல், இரு இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட உள்ளது. மக்கள் அதிகம் இருக்கின்ற இடத்தில், 'வாட்சிங் டவர்' மூலம், கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். தீபாவளியை யொட்டி, 300 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் உட்பட, 600 பேர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.
முக்கியமாக, புறநகர் பகுதி, தனி வீட்டில் இருப்பவர்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்வார்கள். அப்படி செல்லும் மக்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டே ஷனுக்கு அழைத்து தகவல் கூறிவிட்டு செல்லுங்கள். அப்பகுதிகளில், போலீசார் தீவிரமாக ரோந்து மூலம் கண்காணிக்க உதவியாக இருக்கும். வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X