திருப்பூர்:காந்தியடிகள் 150வது பிறந்த நாளையொட்டி, சட்டசபை, லோக்சபா தொகுதி வாரியாக பா.ஜ.,வினர் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.
காங்கயம் வாய்க்கால் மோட்டில் துவங்கி, சின்னாய்புதுார், பாலியக்காடு சவுடேஸ்வரி அம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் வழியாக, பாதயாத்திரை சென்ற பா.ஜ.,வினர், ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் நிறைவு செய்தனர்.மாநில வக்கீல் அணி பொறுப்பாளர் பழனிசாமி, காங்கயம் நகர தலைவர் கோபாலகிருஷ்ணன், ஒன்றியத் தலைவர் ஆனந்த் குமார், மாநில விவசாய அணி செயலர் மோகனப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.