கர்தார்பூர் சாலை நவ., 9ல் துவக்கம்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

லாகூர் : கர்தார்பூர் குருத்வராவுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாலையில், வரும், 9ல், போக்குவரத்து துவக்கப்படவுள்ளதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.






சீக்கியர்களின் பழமையான குருத்வாரா, அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கர்தார்பூர் என்ற இடத்தில் உள்ளது. சீக்கியர்களின் குருவான, குரு நானக்கின் நினைவிடம் இங்கு உள்ளது. இந்தியா - பாக்., எல்லைக்கு மிக அருகில், இது உள்ளது.






வழிபாடு


ஏராளமான சீக்கியர்கள், நம் நாட்டிலிருந்து, கர்தார்பூருக்கு வழிபாடு நடத்துவதற்காக செல்வது வழக்கம். இந்நிலையில், நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின், குர்தாஸ்பூரில் உள்ள தேரபாபா நானக் குருத்வாராவிலிருந்து, கர்தார்பூருக்கு செல்ல, 4 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும்படி, சீக்கியர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனாலும், பாகிஸ்தான் அரசு, இதில் ஆர்வம் காட்டாததால், சாலை அமைக்கும் திட்டம் தாமதமாகியது.

இரு தரப்பு பேச்சுக்கு பின், சாலை அமைக்கும் திட்டத்தை பாக்., துவக்கியது. நம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசும், பாக்., எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அந்த நாட்டு அரசும், சாலை பணிகளை மேற்கொண்டன.






பொருளாதார வளர்ச்சி


இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, அடுத்த மாதம், 9ல், இந்த சாலையில் போக்குவரத்தை துவக்கி வைக்கவுள்ளதாக, பாக்., பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில், அவர் கூறியுள்ளதாவது: உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும், மிகப் பெரியதுமான கர்தார்பூர் குருத்வாராவுக்கு, இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் இருந்தும், சீக்கியர்கள் வழிபாடு நடத்த வருவதற்கு வசதியாக, இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், கர்தார்பூருக்கு ஆன்மிக சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது, பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.இவ்வாறு, அதில் அவர் தெரிவித்துள்ளார். பாக்., தரப்பில், அங்கு வரும் பக்தர்களிடம் நுழைவுக்கட்டணமாக 1,400 ரூபாய் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இறுதி உடன்பாடு எட்டப்படாததால், பக்தர்களின் ஆன் - லைன் முன்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.






மன்மோகனுக்கு அழைப்பு

கர்தார்பூர் சாலை திட்டம் குறித்து, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா முகமது குரேஷி கூறியதாவது:கர்தார்பூர் சாலை துவக்க விழாவுக்கு வரும்படி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தோம். சிறப்பு விருந்தினராக இல்லாமல், சாதாரண நபராக, இந்த விழாவில் பங்கேற்க வருவதாக, அவர் தெரிவித்துள்ளார். அவர், சாதாரண நபராக வந்தாலும், அவருக்கு உரிய மரியாதையையும், கவுரவத்தையும் பாக்., அரசு அளிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-அக்-201910:14:20 IST Report Abuse
vbs manian மன்மோகன் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X