பொது செய்தி

இந்தியா

அருணாசல பிரதேசத்தில் நடமாடும் பள்ளிகள்

Added : அக் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில், பள்ளிகளில் இட நெருக்கடி அதிகம் உள்ளதால், கைவிடப்பட்ட பழைய பஸ்களில், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, லோகித் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பள்ளி படிப்பை, மாணவர்கள் பாதியிலேயே கைவிடுவது தெரியவந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பள்ளிகளில் போதிய இட வசதி இல்லாததே இதற்கு காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து, கைவிடப்பட்ட பழைய பஸ்களை வாங்கி, அவற்றின் கூரைகளை சரி செய்து, அதையே வகுப்பறைகளாக பயன்படுத்தும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.அதற்கு ஏற்ப, பஸ்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பஸ்களின் வெளிப்புறத்தில், பள்ளிகளில் உள்ளதை போல், பெயின்ட் அடிக்கப்பட்டு, படங்களும் வரையப்பட்டுள்ளன. போதிய இருக்கை, கரும்பலகை ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களும், திரும்பவும் படிக்க வரத் துவங்கியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
21-அக்-201905:50:24 IST Report Abuse
Pannadai Pandian The best schools are available in Arunachal Pradesh in whole of India, thanks to central government's aid. Each and every village has good school with qualified teachers. Even the villages where there is no proper roads, have good schools. This is a wrong news. I was particularly working in Tezu and it is one of the best districts in Arunachal Pradesh.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X