பொது செய்தி

இந்தியா

இன்ஜி., கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்க புதிய நிறுவனம்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி: இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணியில், இனி, தேசிய அங்கீகார வாரியம் ஈடுபடாது; அதற்கு பதிலாக, புதிதாக ஒரு நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.


தற்போது, நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கான பணியில், என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியம் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலாக, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையங்கள் அடங்கிய அமைப்பை உருவாக்க, மத்திய மனித வள மேம்பாட்டு துறை திட்டமிட்டது.சென்னை, டில்லி மற்றும் கரக்பூரில் உள்ள, ஐ.ஐ.டி.,கள் பங்களிப்புடன் கூடிய, ஐ.எப்.ஏ.ஏ., எனப்படும் அங்கீகாரத்துக்கான ஐ.ஐ.டி., அறக்கட்டளை என்ற புதிய நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கான தலைமை செயல் அதிகாரி விரைவில் நியமிக்கப்பட உள்ளார். யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உள்ளிட்டவற்றுக்கும், அங்கீகாரம் அளிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள, இந்த நிறுவனம் தயாராக உள்ளதாக, மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-அக்-201906:01:00 IST Report Abuse
Nallavan Nallavan எந்த அமைப்பாக இருந்தாலும் நேர்மையுடன், தகுதி பார்த்து அங்கீகாரம் கொடுக்கும் நிலை இயல்பானதாக ஆகவேண்டும் ......
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
21-அக்-201917:20:40 IST Report Abuse
Gopi நல்லா சூடு வையுங்கோ இன்ஜினியரிங் காலேஜ் திறந்து கல்லாகட்டலாம் என்று இருந்த பல சாராய வியாபாரி அரசியல்வியாதி கல்வித்தந்தைகள் இந்த கிடுக்கு பிடிகளால் காணாமல் போகவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
vvkiyer - Bangalore,இந்தியா
21-அக்-201908:18:34 IST Report Abuse
vvkiyer these Engineering and medical colleges belong to politicians and are grantd autonomous university status. The politicians who are semi literates are the Vice Chancellors of these Universities. These politicians get government land at throwaway prices and their ninstitutions serve as source of making money, with no concern for the quality of eduction, faculty, infrastructure etc. Such institutions should be de recognised. The graduates coming out of these colleges, are not able to communicate. and compete with others. It is time the government takes a serious view of this mess.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X