பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு நிறுவனம் தங்க நாணயம் விற்பனை

Added : அக் 21, 2019
Share
Advertisement

சென்னை: மத்திய அரசின், எம்.எம்.டி.சி., நிறுவனம், அசோக சக்கரம், காந்தி உருவம் பொறித்த, 24 காரட் தங்க நாணயங்களை, ஐந்து, 10 மற்றும் 20 கிராம் எடைகளில் விற்கிறது.அந்நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் எதிரில், எஸ்பிளனேடில் உள்ள, 'சென்னை ஹவுசில்' இன்று முதல், 25ம் தேதி வரை, தங்கம், வெள்ளி பொருட்களின் கண்காட்சி நடத்துகிறது.காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், 'ஹால்மார்க்' தங்க நகைகளை விற்பனை செய்ய உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X