ஜி-7 மாநாடு: டிரம்ப் 'பல்டி'

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
G-7,onald Trump,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்,ஜி-7,மாநாடு

வாஷிங்டன்: மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி - 7 நாடுகள் மாநாட்டை தன்னுடைய கோல்ப் ரிசார்ட்டில் நடத்துவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இடத்தை மாற்றுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி - 7 நாடுகள் அமைப்பு உள்ளது. இதில் கனடா பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம் பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜி - 7 மாநாட்டை புளோரிடாவின் டோராலில் உள்ள தன் கோல்ப் ரிசார்ட்டில் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.


latest tamil news



'தன் சொந்த நலனுக்காக இந்த மாநாட்டை தன் ரிசார்ட்டில் நடத்துவதற்கு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்' என எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இதில் ஊழல் நடப்பதற்கு சாத்தியம் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டின. அதையடுத்து இந்த முடிவை டிரம்ப் மாற்றியுள்ளார். டோரலில் உள்ள கோல்ப் ரிசார்ட்டில் நடத்தும் முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். 'ஜி - 7 மாநாடு நடக்கும் இடம் விரைவில் தேர்வு செய்யப்படும்' என அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Adhithyan - chennai,இந்தியா
21-அக்-201910:26:19 IST Report Abuse
Adhithyan அமெரிக்காவின் முதல் நல்ல அதிபர் அவர் நாட்டுக்கு அவர் நல்லதை செய்கிறார். ஆனால் அவரை கண்மூடி தனமாக எதிர்ப்பதை ஹிலாரி கட்சி கடமையாக கொண்டு உள்ளது. பொறாமை பிடித்த Democratic கட்சி அமெரிக்காவிற்கு நல்லது நடந்தால் ஹிலாரி குழுமத்திற்கு பிடிக்காது. வாழ்க அதிபர் டிரம்ப். 2020 அவரே வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-அக்-201910:37:23 IST Report Abuse
 Muruga Velஇந்திய வம்சாவளியினர் வோட்டு தான் இவரை ஜெயிக்க H1B விசாவில் பத்து வருடம் வேலை செய்தவர் கூட க்ரீன் கார்டு கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X