பொது செய்தி

இந்தியா

தேஜஸ் ரயில் தாமதம்; பயணியருக்கு இழப்பீடு

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (20)
Advertisement
Tejas,train,passengers,compensated,Rs250,dinamalar,தினமலர்,தேஜஸ்,ரயில்

லக்னோ: இந்திய ரயில்வேயின் வரலாற்றில், ரயில் தாமதத்துக்காக, பயணியருக்கு, முதல் முறையாக இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

முழுவதும், 'ஏசி' வசதி செய்யப்பட்ட, நாட்டின் அதிவேக ரயில்களில் ஒன்றான, 'தேஜஸ்' எக்ஸ்பிரஸ் ரயில்கள், பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. 'தேஜஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டால், பயணியருக்கு இழப்பீடு வழங்கப்படும்' என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டில்லி - லக்னோ இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், இரு மார்க்கத்திலும், நேற்று இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. லக்னோ அருகில், கிரிஷக் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டதால், இந்த தாமதம் ஏற்பட்டது.

லக்னோவில் இருந்து புறப்பட்ட ரயிலில், 451 பேரும்; டில்லியில் இருந்து புறப்பட்ட ரயிலில், 500 பேரும் பயணம் செய்தனர். இவர்களுக்கு, 'தாமதத்துக்கு வருந்துகிறோம்' என்ற, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்ட, சிற்றுண்டி, தேநீர் வழங்கப்பட்டது. இதைத் தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தாமதத்துக்கு இழப்பீடாக, ஒவ்வொரு பயணியருக்கும், தலா, 250 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

'இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தபோது கொடுத்துள்ள மொபைல் போன் எண்ணுக்கு, ஒரு இணையதள இணைப்பு அனுப்பப்படும். அதன் மூலம், இழப்பீடை கோரலாம்' என, ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
21-அக்-201913:48:45 IST Report Abuse
g.s,rajan In India passenger trains are always running late
Rate this:
Share this comment
Cancel
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
21-அக்-201912:51:34 IST Report Abuse
T.B.Sathiyanarayananan Yes, correct action. My appreciation to the concerned authorities.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
21-அக்-201916:32:31 IST Report Abuse
சுந்தரம் It should be "My appreciation to the authorities concerned" and not as "My appreciation to the concerned authorities"...
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
21-அக்-201912:35:13 IST Report Abuse
konanki தப்பான கருத்து புகழ். கடந்த ஆறு வருடங்களில் இந்திய வாங்கிய கடன் எல்லாம் அடைத்து விட்டது. U N க்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. காங்கிரஸ் ஆட்சியில் விற்கப்பட்ட பொது துறை நிறுவனங்கள் மாடர்ன் பிட், ITDC ஹோட்டல்கள் BHEL IOC ONGC GAIL போன்ற நிறுவனர்களில் 30 சதவீதத்திற்கு மேல். இது இந்த ஆட்சியில் தொடர்கிறது. அடுத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தாலும் இது தொடரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X